திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

அப்பாவை வெறுத்துப்போய் தடுத்து நிறுத்திய எழில்.. பெருமிதத்தில் பாக்கியா

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ஒன்றானது பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வெளியான புரோமோ நீ ஜெயிச்சுட்டடா ஏழில் என்று பாக்கியலட்சுமி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எழிலின் நீண்ட கனவான தன்னுடைய திரைப்படம் வெளியாக இருப்பதையொட்டி அந்த படத்திற்கான ப்ரிவ்யூ ஷோ பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமிடம் மகன் எழில் இயக்கிய படத்தின் பிரிவியூ ஷோவிற்கு நாம் எல்லோரும் போய் பார்க்கப் போகிறோம் என கூறுகிறார். பின்னர் பாக்கியலட்சுமி போய் உன் அப்பாவையும் வரச்சொல்லி அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அதற்கு எழில் கோபியிடம் சென்று இப்போது கூட அப்பாவிடம் சொல்லி அழைத்து வா என அம்மாதான் என்னை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ஆனால் தயவு செய்து எனது படத்தின் பிரிவியூ ஷோவிற்கு நீங்கள் வரவேண்டாம் என்று  தெரிவித்தார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார். பின்னர் படத்தின் பிரிவியூ ஷோவை பார்க்க இனியா, தாத்தா, பாட்டி, பாக்கியலட்சுமி, அம்ரிதா மற்றும் அவரது குழந்தை உள்ளிட்டோர் கண்டு ரசிக்கின்றனர்.

படம் முடிந்த பின்னர் இனியா கைதட்டி பாராட்டுகிறார். அதன் பின்னர் மேடையில் பேசிய எழில் நான் இந்த படத்தை முடிக்கிறது என்னுடைய லட்சியம் மட்டும் இல்லை. என்னை முழுசா நம்புன எங்க அம்மாவோட லட்சியமும் தான் என பெருமிதத்துடன் எழில் பேசினார்.

மேலும் இந்த இடத்திற்கு வந்ததற்கான முழு காரணம் என்னுடைய அம்மா பாக்கியலட்சுமி என்று தெரிவித்துள்ளார். இதற்கு பாக்கியலட்சுமி நீ ஜெயிச்சுட்டே டா என்ற சந்தோஷமாக தெரிவித்து கட்டியணைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் பாடலின் பின்னணியில் ஒலிக்கும் காட்சிகளோடு இந்த ப்ரோமோ நிறைவு பெற்றது. திரைப்படம் எடுத்த கையோடு எழில் அமிர்தாவை திருமணம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்க ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Trending News