பாக்யாயோட அருமை இப்ப தான் தெரியுது.. ஹனிமூன் முடிந்ததும் கசந்த காதலி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது மனைவி ராதிகாயுடன் ஹனிமூன் சென்ற கோபிக்கு இப்போதுதான் தன்னுடைய முதல் மனைவி பாக்யாவின் அருமை கொஞ்சம் கொஞ்சமா தெரிகிறது.

ஹனிமூன் சென்ற இடத்தில் பாக்யா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்து, ராதிகாவை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. அப்போது தனக்கு எந்த சப்போர்ட்டும் செய்யாத கோபியை ராதிகா வெறுத்து ஒதுக்குகிறார். இதனால் வீட்டுக்கு வந்த கோபி குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு துண்டு கூட எடுத்துக் கொடுக்காமல் அவமானப்படுத்துகிறார்.

Also Read: 2வது விவாகரத்துக்கு ரெடியான கோபி.. ராதிகா, ஹனிமூன் வந்த என்ன பைத்தியமாக்கிட்டா

ஆனால் முதல் மனைவி பாக்யா, கையில் காபி உட்பட அனைத்தையும் கொடுத்து மரியாதையுடன் கோபிக்கு ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்வார். ஆனால் ராதிகா கோபியின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதால், அவருக்கு திருமணமான பிறகு புதிதாக தன்னுடைய வீட்டில் தங்குகிறார் என்று கூட பார்க்கவில்லை.

மேலும் கோபிக்கு வேண்டிய உதவிகளைச் செய்யாமல் தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார். அதை பார்த்ததும் கோபிக்கு காண்டுடேருகிறது. கல்லூரி காதலியை 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் வந்த கோபிக்கு இப்போதுதான் அவருடைய குடும்பத்தின் அருமை தெரிகிறது.

Also Read: இந்த வருட தல தீபாவளி கொண்டாடும் 8 பிரபலங்கள்.. அலப்பறை செய்ய காத்து கிடக்கும் ரவீந்தர் ஜோடி

அதுமட்டுமின்றி ராதிகாவும் பாக்யாவிற்கு கொடூரமான வில்லியாக மாறி, அவர்களது முன்னிலையில் கோபியுடன் சந்தோசமாக வாழ்ந்து வெறுப்பேற்ற வேண்டும் எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது. இதில் கோபி ராதிகாவின் காதல் சுத்தமாக தெரியவில்லை. ராதிகாவின் ஆக்ரோஷம் தான் நாளுக்கு நாள் வெளிப்படுகிறது.

இவ்வாறு ஹனிமூன் முடிந்தபிறகு ராதிகாவின் கொடூரமான முகத்தை பார்ப்பதால் கோபிக்கு ராதிகாவை பிடிக்காமல் போகிறது. மேலும் கோபியை தற்போது இனியா உள்ளிட்ட அவருடைய பிள்ளைகளும் அடியோடு வெறுப்பதால், ராதிகாவின் வீட்டில் இனி வரும் நாட்களில் கோபி சிறைக்கைதியாக இருக்கப் போகிறார்.

Also Read: நாக்க தொங்க போட்டுட்டு வந்துட்டியா கோபி .. அவார்டு பங்ஷனில் அசிங்கப்பட்ட சக்களத்தி

- Advertisement -