பத்ரகாளியாக மாறிய பாக்யா.. பயந்து நடுங்கிய செழியனின் காதலி

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் கோபிக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது அம்மா ஈஸ்வரி தனது வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார். ஆனால் இதற்கு எழில் மறுப்பு தெரிவிக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பாக்யா கோபியை இந்த வீட்டுக்கு கொண்டு வந்தால் தான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று ஒரே போடாக போட்டு விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி மௌனம் காத்து விடுகிறார். அதன் பின்பு செழியனின் காதலி மாலினி அடிக்கடி பாக்யா வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் செழியன் எரிச்சல் அடைந்தாலும் வேறு எதுவும் செய்ய முடியாமல் சகித்துக் கொண்டு சென்றிருந்தார். இப்போது அவர் மனது குளிரும்படியாக ஒரு விஷயம் அரங்கேறி இருக்கிறது. அதாவது செழியனின் குழந்தையை மாலினி கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம் என்று சொல்லி விபரீத பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டார்.

அதாவது குழந்தையை மாடியில் மறைத்து வைத்துவிட்டு காணவில்லை என்று எல்லோரையும் கதிகலங்கள் செய்து விடுகிறார். இதனால் நிலைகுலைந்து போன ஜெனி தனது குழந்தையை காணவில்லை என்று பரிதவிக்கிறார். பாக்யா உட்பட மொத்த குடும்பமும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் மாலினி மாடியில் இருந்து குழந்தையை எடுத்து வருகிறார்.

பாக்யா எப்படி மாடியில் இருந்து குழந்தையை எடுத்து வருகிறாய் என்று கேட்கும்போது நான் தான் விளையாடினேன் என்று மாலினி சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பான பாக்யா மாலினியை அறைந்து விடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த வீட்டு பக்கமே நீ வரக்கூடாது என பத்ரகாளியாக மாறி அதட்டுகிறார்.

இதைக் கேட்டவுடன் செழியனுக்கு மனம் குளிர்ந்து சந்தோஷமாகிவிட்டது. இந்த அவமானத்தால் மாலினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் வரும் எபிசோடுகள் வர இருக்கிறது. பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பல சதி வேலைகளை மாலினி செய்ய உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்