மகளால் அசிங்கப்படும் பாக்யா.. கொஞ்சம் கொஞ்சமாக அப்பா பக்கம் சாயும் பிள்ளைகள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் தன்னை விட்டுப் பிரிந்தாலும், குடும்பம் பக்க பலமாக இருப்பதை நினைத்து பாக்யா பெருமை கொள்கிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இனியா பாடம் கவனிக்கும் நேரத்தில் தோழிகளுடன் அரட்டை அடிப்பதால் வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வர ஆசிரியர் சொல்லிவிட்டார்.

இதனால் இனியாவால் பாக்யா ஸ்கூலில் அசிங்கப்பட்டு நிற்கப் போகிறார். இதன் பிறகு செழியனுக்கு குழந்தை பிறக்கப் போவது என தெரிந்ததும் கோபி அவரிடம் வந்து கனிவுடன் பேசி பழகுகிறார். அந்த நேரம் செழியனும் அப்பாவை வெறுத்து பேசாமல் அமைதியுடன் சென்று விடுகிறார். அப்பா பிள்ளையான செழியன் கொஞ்சம் கொஞ்சமாக கோபி பக்கம் சாய்ந்து விடுவார் போல தெரிகிறது.

Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இதுமட்டுமின்றி எழில் அமிர்தாவை காதலிப்பது தெரிந்தும் எழில் இயக்கும் படத்தின் தயாரிப்பாளரின் மகளான வர்ஷினி எழிலை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒற்றை காலில் நிற்கிறார். இதனால் எழிலின் அனுமதியில்லாமலே எழில் வீட்டிற்கும், அமிர்தா வீட்டிற்கும் சென்று அவர் எழிலை காதலிப்பதை பற்றி சொல்லிவிடுகிறார்.

இதன்பிறகு பாக்கியலட்சுமி குடும்பத்தில் எழில்-வர்ஷினி இருவரின் திருமணத்தைப் பற்றி பேச தொடங்கிவிட்டனர். எழிலுக்கு யாரை திருமணம் செய்து வைக்கலாம்  அமிர்தாவா? வர்ஷினியா? என கேள்வி வரும்போது அனைவருக்கும் வர்ஷினி தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

Also Read: கோபியின் மகனுக்காக அடுத்து நடக்கும் சக்களத்தி சண்டை.. மானங்கெட்ட சீரியலா இருக்குதே!

இப்படி அமிர்தா-எழில் காதலை ஊத்தி மூட வர்ஷினி பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியாக இருப்பதால் நிச்சயம் சரியான முடிவெடுத்து வர்ஷினியை கழட்டி விடுவார்.

அதன் பிறகு எழில்-அமிர்தா வாழ்க்கைக்கு வர்ஷினி வில்லியாக மாறுவார். இப்படி அப்பனுக்கும் மகனுக்கும் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் மானங்கெட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல் என நெட்டிசன்கள் இந்த சீரியலை சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -