90களில் சச்சினுக்கு பிறகு மேட்ச் பார்க்க வைத்த 2 வீரர்கள்.. அழுக்கு ஜெர்சிக்கு அடையாளமான ஆல்ரவுண்டர்

90களில் பல டிவிகள் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனதும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த காலகட்டத்தில் இரண்டு வீரர்கள் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்து பல போட்டிகளை வென்று கொடுத்தனர். குறிப்பாக இவர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

சச்சின் விக்கெட் விழுந்த பிறகு நடு வரிசைக்கு பின் ஆறாவது, ஏழாவது வீரர்களாக களத்தில் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர்கள் ராபின் சிங் மற்றும் அஜய் ஜடேஜா.

அழுக்கு ஜெர்சிக்கு அடையாளமான ஆல்ரவுண்டர்

இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் உண்டு, அட்டகாசமான பில்டிங் மூலம் எதிரணியினரின்15 முதல் 25 ரண்களை கட்டுப்படுத்துவார்கள். அதிரடியாக இரண்டு ரண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி எடுக்க கூடியவர்கள். புழுதி இல்லாமல் இவர்கள் ஜெர்சியை பார்க்கவே முடியாது.

இந்தியாவிற்கு தேவைப்படும் பொழுது தங்களுடைய பந்துவீச்சிலும் அசத்தக்கூடியவர்கள். ராபின் சிங் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர். குஜராத்தை சேர்ந்த ராஜ வம்சத்தை சேர்ந்தவர் அஜய் ஜடேஜா. பலமுறை இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.

இந்திய கிரிக்கெட் அணியில் லோ ஆர்டர் பார்ட்னர்ஷிப் என்றாலே இவர்கள் இருவரின் பெயர்கள் தான் நினைவுக்கு வரும். ராபின் சிங் இந்திய அணிக்காக 136 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 2336 ரண்களை குவித்துள்ளார்.

அஜய் ஜடேஜா மிகவும் அபாயகரமான ஆட்டக்காரர் என்று பெயர் எடுத்தவர். எதிரணியிடமிருந்து எளிதாக போட்டியை மாற்றக்கூடிய இவர் இந்திய அணிக்காக 196 போட்டிகளில் விளையாடி 5359 ரன்கள் அடித்தவர். இதுவரை எந்த அணியும் இவர்கள் இருவரைப் போல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது இல்லை.

Next Story

- Advertisement -