தமிழ் பேச்சாளராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் ஈரோடு மகேஷ். ஆரம்ப காலத்தில் மேடை பேச்சுகள் மூலம் பலரையும் கவர்ந்த ஈரோடு மகேஷ். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தனது காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்து அடுத்தடுத்து படங்களிலும், கல்லூரியில் நிகழ்ச்சிகளிலும் பேச்சாளராக பிரபலமடைந்தார்.
ஒரு பக்கம் மேடை பேச்சுகளில் கவனம் செலுத்தினாலும் மற்றொரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.
ஈரோடு மகேஷ் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் ஒரு முறை தன் உறவினர், ஒருவர் காரில் தன் குடும்பத்தை அழைத்து சென்றதாகவும் பிறகு காரில் இடமில்லை என இவர்கள் இறக்கி விட்டதாகவும் கூறினார்.
அதன் பிறகு இவர் கார் வாங்கும் போது எல்லாம் தன் உறவினருக்கு போட்டோ எடுத்து அனுப்பி வெறுப்பேற்றியதாகவும் ஒரு கட்டத்திற்கு பிறகு கார் வாங்க பார்க்கும் போதெல்லாம் எடுக்கும் புகைப்படத்தை அனுப்பி வேறு வெறுப்பேற்றியதாக கிண்டலாக கூறினார்.
ஆனால் தனது அயராத உழைப்பின் மூலம் 67 லட்ச ரூபாய்க்கு பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஈரோடு மகேஷ் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.