சென்னையில் எடுக்கப்படும் பீஸ்ட் படத்தின் காட்சிகள் இதுதான்.. லீக் ஆனதால் செம அப்செட்டில் படக்குழு

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். அடுத்த ஊரடங்கு வருவதற்குள் மொத்த படப்பிடிப்பையும் விரைந்து முடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது படக்குழு.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நேசன் இயக்கி வருகிறார். மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் நடத்தி முடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்று கொண்டுள்ளன. மேலும் பீஸ்ட் படத்திற்காக மிகப் பெரும் பொருட் செலவில் ஒரு மால் செட்டப் ஒன்றை உருவாக்கி படமாக்கி வருகின்றனர்.

அதில் என்ன காட்சி எடுக்கப்படுகிறது என்பது தற்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அப்செட் செய்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதை படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் நெல்சன் தெரிவித்துவிட்டார்.

அதற்கு ஏற்றாற்போல் தற்போது படமாக்கப்படும் காட்சிகள் என்னவென்றால், தீவிரவாதிகள் பலரும் பொதுமக்கள் இருக்கும் இந்த மாலை ஹைஜாக் செய்து விடுவதாகவும், அதை விஜய் எப்படி தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து தீவிரவாதிகளை அழித்து மக்களை காப்பாற்றுகிறார் என்ற காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இதை எத்தனை விஜயகாந்த் படங்களில் பார்த்திருக்கிறோம் என கிண்டல் செய்து வருகின்றனர். இருந்தாலும் இது உண்மை தகவல்தானா, அல்லது வழக்கம் போல யாரேனும் கிளப்பி விட்டு விட்டார்களா என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

beast poster
beast poster
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்