அக்ஷயாவும் இல்ல, வினுஷாவும் இல்ல.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் இவர்தான்

BB7 4th week Elimination: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7 மற்ற எல்லா சீசன்களை விடவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. போட்டியாளர்கள் அத்தனை பேருமே இதற்கு முந்தைய சீசன்களில் நடந்த எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்துவிட்டு வந்திருப்பதால், ஒருவருக்கொருவர் சலிக்காமல் கண்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், வினுஷா, யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோவிகா, மணிச்சந்திரா, நிக்சன், பிரதீப் என 11 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். மேலும் பார்வையாளர்கள் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என கணித்து இருக்கிறார்கள்.

இந்த 11 பேரில் வினுஷா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் நிக்சன் வினுஷாவை உருவத்தை வைத்து கேலி செய்ததால் அனுதாப அலைகள் ஏற்பட்டு அது ஓட்டாக மாறிவிட்டது. இந்த நிலையில் நேற்றைய நிலைப்படி அக்சயா மற்றும் சரவணன் விக்ரம் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தார்கள்.

ஒருவேளை டபுள் எவிக்சன் நடைபெற்றால் இவர்கள் இருவரும் வெளியேற வேண்டும். சிங்கள் என்றால் அக்ஷயா வெளியேறுவார் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த வாரம் யுகேந்திரன் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் அதிகார பூர்வ ஓட்டு நிலவரப்படி யுகேந்திரன் குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஒரு சில வாரங்களில் அவருடைய குணாதிசியங்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தான் இருந்தார். அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிறைய பேர் அவருடைய கேப்டன்சியில் திருப்தி இல்லை என்று சொல்லி இருந்தார்கள். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் தேவையில்லாத பிளான் பண்ணி பெயரை கெடுத்துக் கொண்டார்.

அக்ஷயா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுகேந்திரன் வெளியாகி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருந்தாலும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறாரா இல்லையா என தேடும் அளவுக்குத்தான் இருக்கிறார்.