வெட்கம், மானம், சூடு உனக்கு இல்லயா.? பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் வெடித்த பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லுக்சுரி பட்ஜெட்காக தில்லிருந்தா ஹலோ சொல்லு என்ற டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

அதில் கார்டன் ஏரியாவில் ரெட், ப்ளூ என்ற இரண்டு போன் பூத் வைக்கப்படுள்ளது. அதில் ஒன்று தைரியம் மற்றொன்று தியாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இரண்டில் எந்த போனுக்கு அழைப்பு வருகிறதோ அதை எடுப்பவர்கள் பிக்பாஸ் சொல்வதை செய்ய வேண்டும்.

நிரூப் முதலில் வரும் போன் அழைப்பை எடுக்கிறார். அதில் பிக் பாஸ் உப்பு, சர்க்கரை, வெங்காயம் இவை இல்லாமல் சமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் பரபரப்பான நிரூப் அனைவரிடமும் உப்பு, சர்க்கரை, வெங்காயம் மூன்றையும் எடுத்து ஸ்டோர் ரூமில் வையுங்கள் என்று சொல்கிறார்.

இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்து போகின்றனர். அதிலும் தாமரை அடுத்து உன்னோட முடியை வெட்ட சொன்னா என்னடா பண்ணுவ என்று குதர்க்கமாக கேட்கிறார். இதுவரை பிக் பாஸுக்கு வராத ஒரு யோசனையை தாமரை கூறியுள்ளார். அநேகமாக அடுத்த அறிவிப்பு இதுவாக தான் இருக்கும்.

மேலும் அனைவரும் சேர்ந்து உப்பு இல்லாமல் எப்படி சாப்பிட முடியும் என்று நிரூப்பிடம் கேட்கின்றனர். ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாத அவர் எனக்கு டாஸ்க் பண்ணி ஆகணும் என்று பிடிவாதமாக நிற்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவர்களை சமாளிக்கும் நிரூப் 95 நாள் இந்த வீட்டில் இருக்கிறோம், வேற என்ன விட்டுட்டு போக முடியும் என்று சொல்கிறார்.

உடனே பிரியங்கா நான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு தான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்கிறார். அதற்கு நிரூப் அப்போ இதெல்லாம் உனக்கு இல்லையா என்று நக்கலாக கேட்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடு சண்டை இல்லாமல் கொஞ்சம் அமைதி பூங்காவாக இருந்தது. அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பிக்பாஸ் தற்போது இப்படி ஒரு டாஸ்க்கை அறிவித்து பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்கியுள்ளார். இந்த வாரம் முழுவதும் இன்னும் இதுபோன்ற பல கலவரங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்