திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

ட்ராபியுடன் செல்பி எடுத்த பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு பாய்.. வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 106 நாட்களை கடந்து இன்றுடன் நிறைவடையவுள்ளது. எனவே இன்று 6 மணிக்கு துவங்க உள்ள கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால் இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து இணையத்தில் இந்த சீசனில் வெற்றியாளர் யார்  என்பது லீக்காகி உள்ளது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதலிடத்தை இந்த சீசனின் என்டர்டைன்னரான ராஜு மக்கள் அளித்த அதிக வாக்கின் அடிப்படையில் பெற்றுள்ளார். இந்த சீசன் துவங்கப்பட்ட நாளிலிருந்தே ராஜு அல்லது பிரியங்கா இருவரும் ஒருவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக இருக்கவேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர்.

எனவே அவர்கள் நினைத்தால் போலவே முதலிடம் ராஜுவிற்கும், இரண்டாம் இடம் பிரியங்காவிற்கும் கிடைத்துவிட்டது. இவர்களைத் தொடர்ந்து பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர். தற்போது ராஜு பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அளிக்கப்படும் ட்ராபியுடன் செல்பி எடுத்துள்ளார் புகைப்பட தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் மூலம் கத்தி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பரிச்சயமான ராஜு, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்று மேலும் பிரபலம் அடைந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த காமெடி, மிமிக்கிரி எல்லாம் ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளது.

அத்துடன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் சிஷ்யனாக விளங்கும் ராஜு, இனி வரும் நாட்களில் வெள்ளித்திரையில் மாஸ் காட்ட உள்ளார். அத்துடன் ராஜுவிற்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே மூன்று படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

raju-winner
raju-winner

பொதுவாக பிக்பாஸ் பிரபலங்களுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. ஆனால் ராஜுவிற்கு கொஞ்சம் அதிகமாகவே இந்த வாய்ப்பு வந்தடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News