பிக்பாஸ் சீசன்5 இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. அடுத்து வெளியேறும் நபர் இவரா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில், போட்டியானது விறுவிறுப்புடனும் காரத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட போவார்கள் என்பதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆகும்.

அந்த வகையில் இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிபி, பாவனி, அபிஷேக் ராஜா, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, வருண், ராஜு, தாமரைச்செல்வி, அபினை, பிரியங்கா ஆகிய 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் அபினை மற்றும் தாமரை ஆகிய இருவருள் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்த வாரம் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அபினை கடந்த வாரத்தின் தலைவராக இருந்து எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.

ஆனால் தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அபினை இந்த வாரத்தில் இடம்பெற்றிருப்பதால் வழக்கம்போல் தப்பிப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது.

அதேபோல் தாமரை பிக்பாஸ் வீட்டில் ஓவர் வாய் அடிப்பதால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். எனவே அபினை மற்றும் தாமரை இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும் வரும் நாட்கள் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை