திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருப்பவர் இவரா? 3 வாரம் தப்பித்து, 4வது வாரத்தில் மாட்டிக்கொண்டார்!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது சண்டைகளை கவனிப்பது என்பது அனைவருக்கும் பிடித்தது தான். இதனை அறிந்தே இப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர் அதில் வெற்றியும் கண்டுள்ளனர். வாராவாரம் ஒரு நபர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்

அந்த விதமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், அபிஷேக் ராஜா ஆகிய 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டன. இந்த வார நாமினேஷனில் அபிநய், பாவனி ரெட்டி ,அக்ஷர ரெட்டி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, இசைவாணி,வருண், பிரியங்கா உள்ளிட்டோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வாரம் இவர்களிலிருந்து ஆணித்தனமாக வெளியேறப் போபவர் இவர்தானாம். அந்தவிதமாக இந்த வாரம் யார் வெளியேற போவார் என அப்பட்டமாக தெரிந்து விட்டது, அது நம்ம சின்ன பொண்ணு அக்கான்னும், அடுத்த வாரம் நம்ம அபிநய் என நெட்டிசன்கள் ஆல் கணிக்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த இரண்டு வாரங்களாக கடைசியில் சேவான பாடகி சின்னப்பொண்ணு லக்கில் தப்பித்து வந்தார். ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக இவர் வெளியேறி விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinnaponnu-cinemapettai
chinnaponnu-cinemapettai

இவர் கேமை விளையாடாமல் சும்மாவே இருக்கிறார், இவரை போட்டியிலிருந்து வெளியேற்றுங்கள் என சின்னப்பொண்ணு வைப்பற்றி பலரும் தங்கள் எதிர்ப்பை வலைதளப் பக்கங்களில் கமெண்ட்டுகள் ஆக தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை இந்த வாரமும் லக்கில் தப்பித்து விட்டார் நம்ம அக்கா என்றால் வெளியேற போகும் அந்த ஆடு நம்ம அம்மாஞ்சி பையன் அபிநய் தான்.

- Advertisement -

Trending News