நாளுக்கு நாள் வனிதாவாகவே மாறி வரும் தாமரை.. முகம் சுளிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை விறுவிறுப்புடன் கொண்டு செல்கிறது. அந்த வகையில் தற்போது பட்டிக்காடா? பட்டணமா? என்ற டாஸ்கில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 2 அணிகளாகப் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சி பட்டிமன்றம் போல் நடத்தப்பட்ட போட்டியின்போது தாமரை நாவடக்கம் இல்லாமல் ஓவராக பேசியது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஏனென்றால் பஞ்ச பூத நாணயங்களில் ஒன்றான காற்று நாணயத்தை தாமரை தன்வசப்படுத்தி இருந்தார். அப்போது சுருதி, தாமரை உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது அவருக்குத் தெரியாமலேயே அந்த நாணயத்தை எடுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தாமரை உடைய எதார்த்தத்தினார் நாணயம் பறிபோனது மற்றும் கேமரா இல்லாத பகுதியில் தன்னிடமிருந்த நாணயத்தை திருடிக்கொண்ட சுருதியின் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

தற்போது நடந்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றத்தில் எந்த தலைப்பு கொடுத்தாலும் சுருதியை தாக்கும் விதத்தில் தன்னுடைய வாதத்தை காரசாரமாக பட்டிமன்றத்தில் தாமரை பதிவிட்டார். தொடக்கத்தில் அமைதியாக இருந்த தாமரை நாணயத்தை பறிகொடுத்த பிறகு, கடந்த சீசனின் ஓவர் சவுண்ட் பார்ட்டி வனிதாவாகவே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.

thamarai-cinemapettai8
thamarai-cinemapettai8

தாமரையை அவ்வப்போது ராஜு கண்டித்த போதும் அப்போதெல்லாம் தலையாட்டிக் கொண்டு, அதன் பிறகு சுருதியை பார்த்ததும் சவுண்டு விட தொடங்கிவிடுகிறார்.

இதற்கெல்லாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல் வந்த பிறகுதான் முடிவு கிடைக்கும். அதன்பிறகு தாமரை கோபம் தணிந்து பழைய மாதிரி அமைதியாக பிக் பாஸ் வீட்டில் உலாவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்