வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கடைசி நிமிடம் ராஜு பாயை டார்கெட் செய்த சுருதி.. கொந்தளித்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 5 வாரத்தை நிறைவடைந்துள்ளது. எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் மக்கள் அளித்த ஓட்டில் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெறும் நபர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரம் சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது ராஜுவிடம், ‘உங்களை எந்த ட்ரிக்ஸ்சுமே பண்ணல’ என்று யாருக்குமே புரியாத ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அதற்கு சக போட்டியாளர்கள் விளக்கம் கேட்டபோது, அது ராஜூவுக்கு நன்றாக புரியும் என்று சூசகமாக பதிலளித்து சென்றுவிட்டார். எனவே சுருதி இவ்வாறு ராஜூவின் மீது பழி போடுவதற்கு காரணம், சுருதி மற்றும் தாமரைக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது தாமரைக்கு ராஜூ அதிகமாக சப்போர்ட் செய்வதால் அவரை பழிவாங்க வேண்டுமென்றே இவ்வாறு கூறியிருக்கலாம் என்று ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

அத்துடன் சமூக வலைதளங்களிலும் சுருதி வெளியேறிய பிறகு அவருக்கு எதிராக பல கருத்துக்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ராஜு பாயை கடைசி நிமிடம் பழி போட்டதற்கு என்ன காரணம் என்று அவர் அந்த நேரம் தெரிவித்திருக்க வேண்டும்.

suruthi-cinemapettai
suruthi-cinemapettai

ஆனால் அதை தெரிவிக்காமல் அவர் மீது குற்றத்தை மட்டுமே காட்டி வெளியே சென்றுவிட்டால், ராஜு பாய்-க்கு நிச்சயம் கெட்ட பெயர் வரும் என்று சுருதி எதிர்பார்க்கலாம்.

ஆனால் ரசிகர்கள் அவ்வாறு நினைக்காமல் ராஜு பாயை வழக்கம்போல் தலையில் தூக்கி கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இந்தப்பிரச்சினையை கூட அவர் பெரிதுபடுத்தாமல், வழக்கம்போல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ராஜு பாயை மேலும் பிடித்து விட்டது.

- Advertisement -

Trending News