விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி, தற்போது ஐந்தாவது சீசனை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து, நாடிய சாங், அபிஷேக் ராஜா சின்னபொண்ணு ஆகியோர் வெளியேறி தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அனுதினமும் விறுவிறுப்பான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த நாட்களில் பண்டிகைகள் தொடர்ந்து வரும் காலகட்டம் என்பதால் அதற்கேற்றார் போல் முன்னேற்பாடுகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த விஜயதசமியை சிறப்பாக கொண்டாடி, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் குதூகலத்தில் ஆழ்த்தினர். அதைப்போன்று தீபாவளியும் சிறப்பாக கொண்டாடி பட்டையைக்கிளப்பும் போகின்றனர் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஏனென்றால் கடந்த பிக் பாஸ் சீசன்4ல் மிகச் சிறப்பாக தீபாவளி கொண்டாடியது போல், இந்த சீசனிலும் தீபாவளிப் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதுகுறித்த எந்த ஒரு ரொம்பவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் போன்றுதான் தீபாவளி அன்றும் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி நமதத்து போன பட்டாசு போல் மாறியது என்று நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.
இருப்பினும் தற்போது ப்ரோமோக்களை வெளியிடுவதை குறைத்த பிக்பாஸ் குழுவினர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் உடன் தீபாவளி பண்டிகையை பிக்பாஸ் வீட்டில் கொண்டாடவும் வாய்ப்பிருக்கிறது.