64 கேமரா முன்னாடி செய்திருக்கலாமே.. திமிரா பேசிய பாவனிக்கு சவுக்கடி கொடுத்த ராஜு பாய்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தொடக்க நாளிலிருந்தே ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட போட்டியாளர் ராஜு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு பிரச்சினையிலும் நேர்மையாகவும் நடுநிலையிலும் நின்று தன்னுடைய கருத்தை பதிவிடுகிறார்.

அந்தவகையில் நேற்று தாமரை உடைமாற்றும் போது உதவிக்கு செல்வதுபோல் நாடகம் ஆடி பாவனி மற்றும் சுருதி இருவரும் திட்டமிட்டு தாமரையின் காற்று நாணயத்தை அபகரித்து விட்டனர். எனவே இதை அறிந்த ஹவுஸ் மேட்ஸ் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டவர்.

குறிப்பாக ராஜு, 64 கேமரா இருக்கும்போது உடைமாற்றும் அறையில் மட்டும் ஏன் கேமரா பொருத்தவில்லை என்றால், அது தனிமனித சுதந்திரத்துக்கு உரிய இடம் என்பதால் பிக்பாஸ் நாகரீகத்துடன் செயல்படுவது போல நாமளும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

எனவே உடைமாற்றும் அறையில் கேமரா இல்லாத போது தந்திரமாக அங்குபோய் தாமரையிடம் நாணயத்தை அபகரித்தது முறையல்ல என ராஜு தன்னுடைய வாதத்தை பதிவிட்டார். மேலும் உடையில் மறைத்து வைத்திருக்கும் நாணயத்தை வேறு எப்படித்தான் திருட முடியும்? என்று பாவனி திமிராகப் பேசிய போதும், அப்ப நீ வைத்திருக்கும் இடத்தில் அத்துமீறி நான் திருடினால் பரவாயில்லையா என்று ராஜு சவுக்கடி கொடுத்தார்.

raju-cinemapettai4
raju-cinemapettai4

எனது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலரும் பாவனி மற்றும் சுருதி இருவரும் செய்தது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத செயல் என்று ஒத்துக் கொண்டனர். இருப்பினும் ராஜு கடைசி வரை தாமரைகாக நின்று பேசியது பாராட்டுக்குரிய விசயம்.

இதேபோல் பிரியங்கா, சின்ன பொண்ணுவை உடைமாற்றும் அறையில் சோதனையிட்டபோது கமல் கண்டித்தது போல, இந்த செயலிலும் பாவனி செய்தது தவறு என்று இந்த வாரம் கமல் தெரிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.