வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

11 வயதில் இருந்தே கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறேன்.. அசிங்கமா பேசியதால் பதிலடி கொடுத்த பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுபவர்கள் கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்ற தலைப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதித்தனர்.

அப்போது ஐக்கி பெர்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதால் பிரியங்கா சக போட்டியாளர்களை பாசத்துடன் கட்டிப் பிடிப்பது சிலரை முகம் சுழிக்க வைக்கும் என்று வாதிட்டார்.

இதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, ’11 வயதில் இருந்தே, பிறரை கட்டிப்பிடித்து என்னுடைய பாசத்தை வெளிப்படுத்துவேன். அதுவும் சைடா இல்ல நேருக்கு நேர் இருக்கமாக கட்டிப் பிடிப்பது தான் என்னுடைய வழக்கம்.

priyanga-bb5-cinemapettai0

கமல் சாரே கட்டிப்பிடி வைத்தியத்தை பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்படி இருக்கும்போது பாசத்துடன் கட்டிப் பிடிப்பது எப்படி தவறாகும் என்று தன்னுடைய கடுமையான வாதத்தை பிரியங்கா பதிவிட்டார்.

எனவே பிரியங்கா கொஞ்சம் கோபமாக பேசியதும், ஐக்கி பெர்ரி சொன்னது தவறுதான் என்று சரணடைந்து விட்டார். அதன் பிறகு பிரியங்கா, நான் இனிமேல் ஐக்கி பெர்ரியை கட்டி பிடிக்கமாட்டேன்.

ஏனென்றால் அவருக்கு அது பிடிக்கவில்லை என்று மீண்டும் தன்னுடைய காட்டமான பேச்சை தொடங்கினார். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்த பிரியங்கா, பிறகு ஐக்கி பெர்ரியை இறுக்கமாக கட்டிப்பிடித்து சமாதனம் அடைந்தனர்.

- Advertisement -

Trending News