மீண்டும் அபிஷேக் கையில் சிக்கிய பிரியங்கா.. நைசாக நழுவிய நிரூப்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இவர் துவங்கும்போது பிரியங்கா மற்றும் நிரூப் உடன் சேர்ந்து அடித்த அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ரசிகர்கள் அபிஷேக் ராஜாவை எலிமினேட் செய்தனர். பின்பு அபிஷேக் இல்லாத பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் தங்களுடைய தனித்தன்மையான விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வந்துள்ள அபிஷேக் ராஜா மறுபடியும் பிரியங்காவை கைக்குள் போட்டுக்கொண்டு வீட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அண்ணாச்சிக்கு இடையே நடந்த தலைவர் போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சினையை லட்ஜூரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக மீண்டும் கிளப்பி விட்டார்.

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட நிரூப், அபிஷேக் ராஜா சீண்டி விடுவதற்கு அடிபணியாமல் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் பிரியங்கா, நிரூப் மற்றும் அண்ணாச்சி இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை வரும்படி மறுபடியும் பேசி ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் அபிஷேக்கும், பிரியங்காவிற்கு இஷ்டத்திற்கு ஏற்றிவிடுகிறார். எனவே அபிஷேக் இல்லாத பிரியங்காவை விரும்பிய ரசிகர்கள் தற்போது பிரியங்காவிடம் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.

ஆனால் அபிஷேக் ராஜா மீண்டும் வந்தபிறகும் அவர் கையில் சிக்கிக் கொள்ளாமல் நிரூப் தன்னுடைய ஆட்டத்தில் தெளிவாக ஆடுவது பாராட்டுக்குரிய விஷயம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்