கடந்த சீசன் போட்டியாளரிடம் பக்கா ட்ரெயினிங் எடுத்த நிரூப்.. பிசிறு தட்டாமல் விளையாடுராரே

விஜய் டிவியில் ஆரவாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக ஆறு வாரத்தை எட்டியுள்ளது. இந்த வார லட்சரி பட்ஜெட் டாஸ்கை அற்புதமாகவும் படுபயங்கரமாகவும் போட்டியாளர்கள் விளையாடினர்.

அதிலும் நிரூப் சற்று வெறித்தனமாகவே விளையாடி பல சிறப்பான சம்பவங்களையும் செய்தார். மேலும் இந்த வார லட்சரி பட்ஜெட் டாக்கில் நிரூப் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பரிசாக அவருக்கு இந்த வார லட்சரி பட்ஜெட் பொருட்களை தேர்வு செய்யவும், அதை முழுவதும் அனுபவிக்கவும் நிரூபிற்கு மட்டுமே உரிமை உண்டு என பிக்பாஸ் அறிவித்தார்.

இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிரூப் லட்சரி பட்ஜெட்டைவிட அதிகமாக ஷாப்பிங் செய்துவிட்டார். விதிமுறைப்படி நிர்ணயித்த தொகையை விட அதிகமான தொகைக்கு பொருள்களை வாங்கினால் மொத்த லட்சரி பட்ஜெட்டும் கேன்சல் ஆகிவிடும்.

இதனை சரியாக உணராமல் தெளிவான முறையில் ஷாப்பிங் செய்யாத நிரூப் மொத்த லட்சரி பட்ஜெட்டையும் கோட்டை விட்டார். மேலும் இதில் இவர் சரியாக பிளான் பண்ணி பொருள்களை பெற்றிருந்தாலும் அதை அவர் மட்டுமே பயன்படுத்தி இருந்திருக்க முடியும். ஆனால் இப்ப மொத்தமாக யாருக்கும் பயன்படாமல் போனது இந்த வார லட்சரி பட்ஜெட்.

போன சீசனில் பாலாஜி முருகதாஸ் ஆல் இப்படித்தான் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு வார பட்ஜெட்டை இழக்க நேர்ந்தது. அதில் பாலாஜி முருகதாஸ் விதிமுறைகளை மீறி விளையாடியதால் மொத்தமாக லட்சரி பட்ஜெட்டை இழந்தனர். ஆனால் இங்கோ நிரூபிற்கு வாய்ப்பு கிடைத்தும் இதனை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளாமல் பட்ஜெட்டை கோட்டை விட்டுவிட்டார்.

பாலாஜி, நிரூப் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், எப்படியெல்லாம் விளையாடினால் கேமராவில் கவனம் பெற முடியும் என்பதை பாலாஜி நிரூப்பிற்கு சொல்லிக் கொடுத்திருப்பார். அதனை பிசிறு தட்டாமல் நிரூப்பும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்