ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிக்பாஸ் வீட்டில் டான்சிங் ரோஸ் போல் மாறி வரும் பிரபலம்.. எதிரிக்கு இவரை பிடித்துவிடும் போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு 20 நாட்களை கடந்த நிலையில், தொடக்கத்தில் இருந்தே நேர்மையான விளையாட்டுக்கொண்டிருக்கும் ராஜு, பலருடைய கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் கத்தி கதாபாத்திரத்தில் நடித்த ராஜு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு கிடைத்த ரசிகர் கூட்டம் பெருகி உள்ளது. ஏனென்றால் ராஜு தன்னுடைய கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்ட விதமும், அதன் பிறகு, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுடன் அவர் நடந்து கொள்ளும் விதமும் பார்ப்பதற்கே அழகாக உள்ளது.

அத்துடன் ராஜு, பஞ்சதந்திர நாணயம் டாஸ்கில் தன்னுடைய நிதானத்தில் இருந்து தவறாமல், அவரால் முடிந்த அளவிற்கு சுவாரஸ்யத்துடன் விளையாடினார். மேலும் பிரியங்கா ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சின்ன பிள்ளை போல் தன்னுடைய வீட்டை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜு பிரியங்கா கேட்டதை சமைத்து தந்தார்.

அத்துடன் நேற்று அண்ணாச்சி உடன் அபிஷேக் மற்றும் பிரியங்கா கடுமையாக வாதிட்ட போது, ராஜு குறுக்கிட்டு நியாயமாக பேசினார். இதுமட்டுமின்றி ராஜு தன்னுடைய மிமிக்கிரி திறமையையும், கதை சொல்லும் விதத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக காண்பித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

bb5-raju-cinemapettai
bb5-raju-cinemapettai

அத்துடன் அவர் சக போட்டியாளர்களையும் தன்னுடைய காமெடியினால் என்டர்டைன்மென்ட் செய்து மகிழ்வித்து கொண்டிருக்கிறார். எனவே கடுமையான விவாதங்களையும் சண்டைகளையும் போட்டு பிரபலமாக நினைக்கும் போட்டியாளர்கள் மத்தியில் ராஜு அமைதியாக இருந்து காரியம் சாதிப்பது, கடந்த எந்த சீசனிலும் எவரும் செய்யாத புது முயற்சி.

எனவே ராஜு இதனை ஸ்டேட்டஜியாக வைக்காமல் இயல்பான குணமாக இருப்பதால் எதிரிக்குக் கூட இவரை பிடித்துவிடும். அந்த அளவிற்கு ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாகவும் திறமையுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News