பக்கம் பக்கமாக சினிமா டயலாக் பேசிய அபிஷேக்.. செம பல்பு கொடுத்த நிரூப்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா, நிகழ்ச்சியை சுவாரசியபடுத்துவதற்காக மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். எனவே அவர் வந்த இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சியின் போக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க படும்பொழுது பிரியங்கா, நிரூப், அபிஷேக் மூன்று பேரும் கூட்டு சேர்ந்துகொண்டு மற்ற போட்டியாளர்கள் இடம் இவர்களது முடிவை திணித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது இரண்டாவது முறையாக வீட்டிற்குள் நுழைந்த அபிஷேக் ராஜாவிற்கு பிரியங்கா காட்டிய ஒத்துழைப்பை போல் நிரூப் கொடுக்க மறுத்துவிடுகிறார். இதனால் காண்டான அபிஷேக் பக்கம் பக்கமாக சினிமா டயலாக் பேசி நிரூப்பை கவுக்க இஷ்டத்திற்கு பேசுகிறார்.

குறிப்பாக நானும் பிரியங்காவும் அன்பைக் கொடுப்பதிலேயே ஆனந்தம் அடைகிறோம். ஒருவன் எங்களை எரித்து அந்த வெளிச்சத்தில் நடந்தால் அவனுக்கு மனமுவந்து வழிகாட்டுவோம். இந்த வைல்ட் கார்ட் என்ட்ரி மக்கள் எனக்கு போட்ட பிச்சை, எனவே இந்தமுறை என்னை கொளுத்தி கிட்டாவது மக்களுக்கு சுவாரசியத்தை கொடுப்பேன் என்று வீர வசனம் அபிஷேக் வரிசையாகப் பேசி பொழிந்தார்.

ஆனால் இதற்காக மயங்காத நிரூப், பிரியங்கா மற்றும் ராஜு இருவரை மட்டுமே இந்த வீட்டில் நம்புவேன் என்று சக போட்டியாளர்கள் முன்னிலையில் கூறி அபிஷேக் ராஜாவிற்கு செம பல்பு கொடுத்தார்.

இருப்பினும் நிரூப், அபிஷேக் ராஜா மற்றும் பிரியங்கா இருவருடன் கூட்டு சேராமல் இருந்தாலும் அவருடைய ஆட்டத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்