சுட சுட வெந்நீரை தலையில் ஊற்றிய அபிஷேக்.. நீரூபை கதறவிட்ட பிரியங்கா!

பிக்பாஸ் சீசன்5 நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் விடே கலவர பூமியாக மாறிவிட்டது. ஏனென்றால் லட்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிரியங்கா பலமுறை நிரூப்பை கலாய்த்தார். அப்போதெல்லாம் டாஸ்க்கிற்க்காக என எடுத்துக் கொண்ட நிரூப் பொறுமை தாங்காமல் வெடித்து விட்டார்.

அத்துடன் ராஜு தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்குக் கேட்கும் படி கத்திப் பேசி பாத்திரம் விளக்க வைத்தது, நிரூப்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே நேற்றிரவு காரசாரமான விவாதம் எழுந்தது.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் அபிஷேக் பிரியங்காவை பேசியதற்காக கொந்தளித்தார். அப்போது பிரியங்கா அழுததை பார்க்க முடியாத அபிஷேக், நிரூப்பின் மண்டையை உடைக்க போகிறேன் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்.

ஆனால் வெட்டிப் பேச்சுதான், போன வேகத்திலேயே திருப்பி வந்துவிட்டார். அதன் பிறகு அழுது கொண்டிருந்த பிரியங்காவை பார்த்து தாங்கமுடியாத அபிஷேக் கோபத்துடன் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார். பிறகு பிரியங்கா, ‘எனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் சூடு தண்ணி போட்டுக்கொடு என்று கேட்டபோது, டம்ளரில் சுடு தண்ணியை கொண்டு வந்து அபிஷேக், ‘இனி அழுக மாட்டேன் என்று சொல் இல்லையென்றால் இதை என்மேல் ஊற்றி கொள்வேன்’ என்று அபிஷேக் ராஜா தன்னுடைய தலையில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டார்.

இதைப் பார்க்க முடியாத பிரியங்கா, ஓடோடி வந்து அபிஷேக் ராஜாவின் தலையை துவட்டி விட்டார். இந்த நிகழ்வுகளை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இரண்டு பேரையும் கண்டபடி கழுவி ஊற்றுகின்றனர்.

ஏனென்றால் பிக்பாஸ் விளையாட்டில் அபிஷேக் ராஜா மற்றும் பிரியங்கா இருவரின் அழிச்சாட்டியத்திற்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நிரூப்பை கதற விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்