உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க கூடிய பிக்பாஸ் சீசன்5 தற்போது, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கம்போல் கமல்ஹாசன், ஒற்றுமையாக இருக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக கேள்விகளின் வாயிலாக அஸ்திவாரம் போடுகிறார்.
ஏனெனில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு, போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து நடத்திய நாடகம், ஒருவருக்கொருவர் காண்பித்த அன்பு போன்றவையெல்லாம் ரசிகர்களிடையே, இது பிக்பாஸ் வீடா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதனால் போட்டியாளர்களின் ஒற்றுமையை சீண்டி பார்க்கும் வகையில் உலகநாயகனின் ஒவ்வொரு கேள்வியும் இடம் பெற்று வருகிறது.
தற்போது உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை தூண்டும் வகையில் பிக்பாஸ் வீடு, மறுபடியும் புதிர் சூழ்ந்தது போல மாற்றியுள்ளார். அதுவும் குறிப்பாக அவர் ‘எதிர்பாராததை எதிர் பாருங்கள்’ என்று கூறியுள்ளது ரசிகர்களிடையே விறுவிறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்களிடம், ‘உங்களில் யார் எல்லாம் ஸ்டேட்டஜி (வியூகம்) உடன் விளையாடுகிறார்கள்?’ என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். அப்போது ஐக்கி பெர்ரி மற்றும் பாவனி இவர்கள் இருவரும், ஸ்டேட்டஜி உபயோகிப்பது அபிஷேக் ராஜா என்று கூறியுள்ளார்கள்.
அதிலும் ஐக்கி பெர்ரி, பிரியங்காவை பற்றி கமலிடம் வெளிப்படையாக கூறினார். பிரியங்கா தனக்கென தனி வியூகம் எதையும் பின்பற்ற வில்லை ஆனால் அவ்வப்போது போட்டுக் கொடுக்கும் செயலில் ஈடுபடுகிறார் என்று ஐக்கி கமலிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக பிரியங்கா செய்யும் அட்ராசிட்டி கமலிடம் முகத்திற்கு நேராக வெளிச்சம் போட்டு காட்டிய ஐக்கி பெர்ரியை வரும் வாரத்தில் பிரியங்காவின் அன்பு கூட்டணி ஆட்சி வச்சு செய்யும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.