10 வருடங்களாக தம்பியை ஒதுக்கிய பிக்பாஸ் போட்டியாளர்.. அப்படி என்ன கோபம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டே வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த முடிந்த டிக்கெட் டு ஃபினாலே டாக்கில் அமீர் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதல் பைனல் லிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எதை எடுத்துச் செல்லப் போகிறீர்கள்? என பிக்பாஸ் கேள்வி எழுப்பியதற்கு, வீட்டில் இருக்கும் 8 பேரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதில் நிரூப் சொன்ன காரணம் பிக் பாஸ் போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏனென்றால் நிரூப் தன்னுடன் ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த சொந்தத் தம்பியுடன் 10 வருடங்களுக்கு மேலாக பேசவில்லையாம். அவருடைய அப்பா பலமுறை சொல்லினால் நிரூப் தன்னுடைய தம்பியுடன் பேசத் தயாராகவில்லையாம்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த ஒரே மாதத்தில் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுடன் பேசி பழகி ஒருவர் ஒருவருடைய உணர்வுகளை நிரூப் புரிந்து கொண்டுள்ளாராம். ஆனால் சொந்த வீட்டில் இருக்கும் தம்பியுடன் சிறுவயதில் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு 10 வருடம் பேசாமல் இருந்ததை நினைத்து தற்போது நிரூப்பிற்கு தன்மீதே கோபம் ஏற்பட்டுள்ளதாம்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும் நிரூப், அவருடைய தம்பி மற்றும் அப்பாவிடம் பாசத்தை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். இதுமட்டுமின்றி நிரூப் பிக் பாஸ் விளையாட்டை சுயநலமாக விளையாட வேண்டும் என்று முடிவெடுத்து, அவ்வாறே விளையாடியதால் தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என்றும் அந்த குணத்தை நிரூப் தொடர்ந்து அவர் உடன் எடுத்துச் செல்லப் போவதாக சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

எனவே பிரியங்கா நட்பு பாராட்டினாலும் அதை பொருட்படுத்தாத நிரூப், தன்னுடைய தம்பியிடம் இதுபோன்று நடந்திருப்பது, அதன் பிறகு தற்போது அவர் மனம் மாறி இருப்பது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்படுகிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை