யாஷிகா உடன் பிரேக்கப் ஆனது இதனால்தான்.. பேட்டியில் காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம்!

யாஷிகா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவருடைய நண்பர்களான பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப் இருவரும் அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொண்டனர். அதில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டாப் 5 இடத்தைப் பிடித்த நிரூப், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் அளித்த பேட்டி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனென்றால் இவர் யாஷிகா உடன் எதற்காக பிரேக்கப் செய்து கொண்டேன் என்பதை அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார். யாஷிகாவும் நிரூப்பும் ஒருவரை ஒருவர் காதலித்து உண்மைதானாம். ஆனால் இருவருக்கும் செட் ஆகாததால் பேசி விரிந்து விட்டனராம். வேறு எந்த காரணமும் இல்லை. அதற்காக ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து, முகத்தை திருப்பிக் கொண்டு செல்லாமல் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு யாஷிகாவால் தான் கிடைத்தது. அவருடைய பிரபலத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது. எங்களுக்கு பிரேக்கப் ஆனாலும் அதன்பிறகு நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு யாஷிகாவை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.

மேலும் யாஷிகா விபத்தில் சிக்கி தற்போது உடல்நிலை தேடி வந்த பிறகு முதன்முதலாக நிரூப்பை பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிரூப் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் யாஷிக- ஐஸ்வர்யா இருவரும் நேரலையில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று லைவ் வீடியோவில் யாஷிகாவிற்கு நிரூப் லிப்-டூ-லிப் முத்தம் கொடுத்து பெரிதும் சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பிறகு அவரே பிக்பாஸ் வீட்டில் நான் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரெண்ட் என்பதை ஒத்துக் கொண்டார். அதன்பிறகு நிரூப் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய வித்தியாசமான ஸ்டேட்டஜியை பயன்படுத்தி பைனல் லிஸ்ட் ஆகவும் தேர்வானார். அதையும் யாஷிகாவிற்கு அர்ப்பணிப்பதாக பிக்பாஸ் வீட்டில் நடுராத்திரியில் தனியாக அமர்ந்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார்.

எனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி நிரூப், யாஷிகா உடன் ஏன் பிரிந்தேன் என்பதை தெளிவாக விளக்காமல் ஒரே வார்த்தையில் செட்டாகவில்லை என்று கூறியிருப்பது தற்போது ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்