ஒரே மேடையில் பயில்வானும், கே ராஜனும்.. மைன்ட் வாய்ஸ்னு சத்தமா பேசியதால் சலசலப்பு

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பற்றி பல கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் பொங்கி எழுந்த தயாரிப்பாளர் கே ராஜன் பயில்வான் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவரின் செயல்பாடுகள் குறித்து கண்டனமும் தெரிவித்தார். அதற்கு பதிலாக ரங்கநாதனும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இப்படி இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் சண்டையிட்டுக் கொண்டது பயங்கர வைரலானது. அதை தொடர்ந்து தற்போது ஒரு பட விழாவில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர். இப்போதெல்லாம் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் எடுப்பவர்கள் இது போன்ற சச்சையான விஷயங்களை பேசும் நபர்களை விழாக்களுக்கு அழைக்கின்றனர்.

இதன் மூலம் ஏதாவது ஒரு வகையில் தங்கள் படங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அதே போன்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பயில்வான் ரங்கநாதன் மேடையில் அமர்ந்திருக்க தயாரிப்பாளர் ராஜன் பேச ஆரம்பித்தார்.

அப்போது அவர் அந்தப் படத்தை பற்றி சில விஷயங்கள் பேசிவிட்டு பயில்வான் ரங்கநாதன் குறித்து மறைமுகமாக தாக்கி பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆர்வ மிகுதியில் அவர் வெளிப்படையாகவே சில விஷயங்களை பேசினார். ஆனால் பயில்வான் ரங்கநாதன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அதைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தார்.

அதன் பிறகு பேச வந்த பயில்வான் எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நான் எப்போதும் உண்மையைத்தான் கூறுவேன். அதனால்தான் அனைவரும் என்னை நம்புகின்றனர் என்று ராஜனை தாக்கும் விதமாக அவரும் தன் பங்கிற்கு பேசினார்.

அவர்களுடைய இந்த பேச்சு மேடையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. எது எப்படியோ படக்குழு எதிர்பார்த்ததுபோல அவர்களுக்கு இதன் மூலம் ஒரு பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது.

Next Story

- Advertisement -