சூரியவம்சம் இல்ல, சிவாஜி படத்தின் அட்ட காப்பி தான் வாரிசு.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் தளபதி விஜய்யின் வாரிசு படம் தற்போது திரையரங்குகளில் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதுமே மாஸ் ஹீரோவாக பார்த்த விஜய்யை இந்த படத்தில் சென்டிமென்ட் ஹீரோவாக பார்ப்பதற்கு பலரும் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிக்கின்றனர்.

ஆனால் வாரிசு படத்தின் கதை, அப்படியே நடிகர் சிவாஜி கணேசன் படத்தின் கதை என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். எப்பேர்ப்பட்ட நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அதற்கு சர்ச்சைக்குரிய விமர்சனங்களை கொடுத்து சமூக வலைதளங்களை பற்றி எரிய வைக்கும் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய்யின் வாரிசு படத்தை குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Also Read: படத்திற்கு குஷ்பூ சீன் தான் முக்கியம்.. வாரிசு பட எடிட்டரின் பரபரப்பான பேட்டி

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கும் இந்த படத்தின் கதை சூரியவம்சம் இல்ல. ஏற்கனவே 1960 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான படிக்காத மேதை படத்தின் கதையின் அட்ட காப்பி. வாரிசு படத்தில் விஜய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் படிக்காத மேதை படத்தில் சிவாஜி நடித்திருப்பார்.

எஸ் வி ரங்கராவ் கேரக்டரில் வாரிசு படத்தில் சரத்குமார் நடித்திருப்பார். சௌகார் ஜானகி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களிலும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சிவாஜி அந்தப் படத்தில் படிக்காத மேதையாய் இருப்பார்.

Also Read: மோசமான விமர்சனத்தால் வீழ்த்தப்பட்ட வாரிசு.. விஜய்யின் மார்க்கெட்டை சரியா வைத்த வம்சி

வாரிசு படத்தில் விஜய் படித்திருப்பார். படிக்காத மேதை படத்தில் ரங்கராவ்-விற்கு மூன்று மகன்கள். நாலாவதாக சிவாஜியை ரங்கராவ் எடுத்து வளர்ப்பார். பெற்று மூன்று மகன்களும் அப்பாவிற்கு துரோகம் செய்வார்கள். ஆனால் கடைசியில் தத்தெடுத்த நான்காவது மகனான சிவாஜி தான் அப்பாவின் சொத்துக்களை காப்பாற்றி அந்த குடும்பத்திற்கு கௌரவத்தை சேர்ப்பார்.

அதே படம் தான் வாரிசுவும் என்று வம்சியின் கதையை டூப்ளிகேட் என பயில்வான் ரங்கநாதன் உடைத்து பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி படிக்காத மேதை படத்தை டிவியில் வேண்டுமானாலும் போட்டா பார்த்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் என பயில்வான் ரங்கநாதன் பொசுக்குன்னு சொல்லிட்டாரு.

Also Read: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தெம்பில்லாத துணிவு.. தலை கால் புரியாமல் ஆடும் வாரிசுவின் ஆட்டநாயகன்

Next Story

- Advertisement -