வங்க புலிகளை பந்தாடி கங்காருவை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்.. நாகினி நடனத்திற்கு கீரிப்பிள்ளைகள் வைத்த ஆப்பு

ஆப்கானிஸ்தான் அணி பல திறமைகள் இருந்தும் முக்கியமான போட்டிகளை தென்னாப்பிரிக்கா போல் கோட்டை விட்டுவிடும். இப்பொழுது இந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல் முறையாக வரலாற்று சாதனை செய்துள்ளார்கள். இந்த தொடரில் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பெரிய மனச்சோர்வில் இருந்து வந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரே ஆதரவு கிரிக்கெட் போட்டி மட்டும்தான். இந்த உலக கோப்பையில் அந்நாட்டு மக்களுக்கு உற்சாகம் தரும் அளவில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 115 ரன்கள் என்ற எளிதான இலக்கை வைத்துக்கொண்டு பங்களாதேஷ் அணியை சுருட்டி உள்ளனர்.105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது பங்களாதேஷ்.

தெருவில் மூளை முடுக்குகளில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் நாட்டில் கொண்டாடி வருகின்றனர். போட்டியை வென்று விட்டு அந்நாட்டு வீரர்கள் கண்ணீர் மல்க மைதானத்தை சுற்றி வந்த காட்சி ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.

நாகினி நடனத்திற்கு கீரிப்பிள்ளைகள் வைத்த ஆப்பு

இந்த வெற்றியின் மூலம் வரலாற்றில் முதன்முறையாக செமி பைனலுக்கு முன்னேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதனால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிப் போகும் வாய்ப்பை இழந்துள்ளது. ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெறாமல் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மூன்று போட்டிகள் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மற்றும் பெற்ற ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடம் பெற்றதால் தொடரில் இருந்து வெளியேறியது.

Next Story

- Advertisement -