கமலின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போய் கண் கலங்கிய பாலச்சந்தர்.. அப்போதே பயத்தை காட்டிய ஆண்டவர்

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவுக்காக எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் அதை செய்யக்கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான கமலை ஒரு ஹீரோவாகியது பாலச்சந்திரன் தான்.

கமலுக்கும், ரஜினிக்கும் நிறைய படங்களை பாலச்சந்தர் கொடுத்துள்ளார். தனது குருவே தன்னை பார்த்து கண் கலங்கும்படி கமல் செய்துள்ளார். அதாவது தமிழை போல தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கமலை அறிமுகப்படுத்தியது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் தான்.

Also Read : கமல், ரஜினியின் குருவுக்கே இந்த நிலைமையா.? கே பாலச்சந்தர் பார்த்து பதறும் பழம் தின்னு கொட்டை போட்ட நடிகர்

தெலுங்கில் மாரோ சரித்திர என்ற படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், சரிதா ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 800 நாட்கள் நடைபெற்றதாம்.

இந்த படம் தொடங்கிய போது கமலுக்கு தெலுங்கு மொழி தெரியவில்லை. அதன் பின்பு தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டு நான்கு வகையான தெலுங்கு ஸ்லாங்கில் ஒரே ஷாட்டில் அதாவது 300 அடி ரீல்லை பேசி முடித்து பாலச்சந்தரையே ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Also Read : உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்

அதுமட்டுமின்றி இந்த படத்தை பாலச்சந்தர் ஹிந்தியில் ஏக் துயூஜே கே லியா என்ற பெயரில் எடுத்திருந்தார். இந்தப் படத்திலும் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதிலும் அந்த காட்சி எடுக்கும் போது நான்கு வகையான பாஷையை ஹிந்தியிலும் ஒரே ஷாட்டில் பேசி முடித்து பாலச்சந்தரை ஆச்சரியத்தில் கண்கலங்க வைத்து விட்டாராம் கமல்.

இதை பார்த்துவிட்டு பாலச்சந்தர் இவனை அரசியலுக்கு மட்டும் விட்டுறாதீர்கள், அரசியல் தெரியவில்லை என்றாலும் அதையும் கற்று கரைத்துக் குடித்துவிட்டு அனைவரையும் காலி செய்து விடுவான் என்று மற்றவர்களிடம் பெருமையாக பேசி உள்ளார். அப்போதே ஆண்டவர் தனது குருவுக்கே பயத்தை காட்டியுள்ளார்.

Also Read : எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Next Story

- Advertisement -