Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பழனிச்சாமியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாக்யா வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்துடன் போகிறார்கள். அங்கே போன இடத்தில் பழனிச்சாமியின் இரண்டு தங்கைகள் குடும்பத்துடன் வந்திருக்கிறார்கள்.
அப்பொழுது பழனிச்சாமியின் அம்மா, பாக்யாவை காட்டி இவளை தான் மருமகளாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என மகள்களிடம் சொல்கிறார். அதற்கு மகள்களும் எங்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.
பிறகு பங்க்ஷன் கொஞ்சம் களைகட்ட ஆரம்பித்த நிலையில் பழனிச்சாமியின் அக்கா மகன் வருகிறார். இவருடைய கேரக்டர் ரொம்பவே கலகலப்பாக அனைவரிடமும் மரியாதையுடன் பேசி பழகுகிறார். அத்துடன் இனியாவை பார்த்ததும் இவருக்கு பிடித்து விட்டது. அதே மாதிரி இனியாவிற்கும் பழனிச்சாமியின் அக்கா மகனை பார்த்ததும் மனதிற்குள் காதல் பூத்து விட்டது.
பாக்கியவுடன் சேர நினைக்கும் பழனிச்சாமி
பிறகு இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்கள். இதை பழனிச்சாமியின் அக்கா பார்த்ததும் இவர்களுடைய ஜோடியும் நன்றாக தான் இருக்கிறது. இதைப் பற்றி பாக்யாவின் மாமியாரிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். அதே மாதிரி பழனிச்சாமி இடமும் உங்களுக்கு வரப் போகிற பொண்ணு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதற்கு ஒவ்வொரு விஷயமாக எடுத்துச் சொல்லும் பொழுது பாக்யாவும் அதே மாதிரியே நடந்து கொள்வது மாதிரி காட்சிகள் அமைகிறது. உடனே பழனிச்சாமி மனதிற்குள் பாக்கியா நமக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறார்.
இப்படி பழனிச்சாமி, பாக்யாவை கல்யாணம் பண்ணுவதற்கு தற்போது தயாராக இருக்கிறார். அத்துடன் இனியாவுக்கும் ஒரு ஆளு கிடைத்துவிட்டது. அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே ஒரே மேடையில் திருமணத்தை பண்ணி வைத்து சுபம் போட்டு விடுவார்கள் போல.
ஆனால் இதற்கெல்லாம் பாக்கியா எந்த காரணத்தை கொண்டும் சம்மதம் தெரிவிக்க மாட்டார். பழனிச்சாமி எப்பொழுதுமே எனக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் தோள் கொடுக்கும் தோழர். கடைசிவரை இந்த நட்பு மட்டும் எனக்கு போதும் என்று புரட்சிகரமாக பேசி முடித்து விடுவார்.