எஸ்ஏசி-யை வைத்து விஜய்யை நக்கல் செய்த பயில்வான்.. ஜோடியை மாத்துற மாதிரி அதையும் மாத்துறீங்களா!

பயில்வான் ரங்கநாதன் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் விளாசி வருகிறார். அவ்வாறு இப்போது தளபதி விஜய்யை கலாய்க்கும் அளவுக்கு அவர் சேனலில் பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் தந்தை வைத்து ஒப்பிட்டு கலாய்த்து தள்ளி உள்ளார்.

அதாவது தற்போது விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது கெட்டப் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் சமீபகாலமாக விஜய்யின் ஹேர் ஸ்டைல் ஒவ்வொரு படத்திற்கும் வேறுபட்டு காணப்படுகிறது. இப்போதெல்லாம் படங்களில் விஜய் விக் பயன்படுத்தி வருகிறார் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

Also Read : தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

இதை குறிப்பிட்டு தான் பயில்வான் நக்கல் அடித்து பேசி உள்ளார். அதாவது விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏசி-கே இன்னும் தலைமுடி நன்றாக இருக்கிறது. ஆனால் விஜய் கடந்த ஏழு வருடங்களாகவே தலையில் விக் வைத்து படங்களில் நடித்து வருகிறார். ரஜினியை பொறுத்தவரையில் படங்களுக்கு மட்டுமே விக்கை பயன்படுத்துவார்.

மேலும் கமலுக்கு முடி உதிர்வு பிரச்சனை வந்த போது வெளிநாட்டுக்குச் சென்று பிரச்சனையை சரி செய்துவிட்டு வந்துள்ளார். அஜித்தை பொறுத்தவரையில் தற்போதும் அவர் ஒரிஜினல் முடியுடன் தான் இருக்கிறார். நடிகர்கள் அதிக ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

Also Read : தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

இதனால் தான் விஜய்க்கும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் என்ன குறை என்றால் படத்திற்கு படம் ஜோடியை மாற்றுவது போல ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விக்கை பயன்படுத்துகிறார். இது அவருக்கு சுத்தமாகவே செட் ஆகவில்லை. கமலை போல அவரும் வெளிநாட்டுக்கு சென்று இதற்கான சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும் முடி நடுதல் போன்ற சிகிச்சை செய்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் ஒரே ஹேர் ஸ்டைல் உடன் விஜய் இருக்கலாம் என்று பயில்வான் கூறியுள்ளார். இவர் பேசியது அஜித் ரசிகர்களுக்கு தீனி போட்டது போல் ஆகி விஜய்யை இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also Read : சிவகார்த்திகேயனோட ஜோடி போட அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது.. சீக்ரெட்டை போட்டுடைத்த பயில்வான்

Next Story

- Advertisement -