புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

திருப்பதிக்கு சென்ற சிவகார்த்திகேயனுக்கு வந்த ஆப்பு.. வெறுத்துப் போய் முழுவதுமாக கடனடைத்த SK

Actor Sivakarthikeyan went to Tirupati: தற்போது பொங்கலுக்கு ரிலீசான சிவகார்த்திகேயனின் அயலான் படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனா அயலான் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் 5 வருடங்களாகவே பல பஞ்சாயத்தில் சிக்கி தவித்தனர். ஒரு வழியா படத்தை எப்படியோ ரிலீஸ் செய்து 50 கோடி வசூலையும் கடந்துவிட்டது.

அயலான் படத்தின் ரிலீஸுக்காக சிவகார்த்திகேயன் சுற்றி முற்றிலும் வாங்கி வைத்திருந்த 27 கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார். பல பேரிடம் கடன் வாங்கி இருந்த பெருந்தொகையை ஒரு வழியாக அடைத்துவிட்டார். சிவகார்த்திகேயன் அயலான் படத்தை பொங்கலுக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என எல்லா பிளானையும் பக்காவாக போட்டு வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்ய திருப்பதி சென்றார்.

ஆனாலும் சிவகார்த்திகேயன் மூன்று கோடி கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என தகராறு செய்தார்கள். சிவகார்த்திகேயனின் ஐந்து வருட உழைப்புதான் அயலான். இந்த படத்திற்காக சம்பளத்தை கூட சிவகார்த்திகேயன் வாங்காமல், படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்புடன் தான் இருந்தார்.

Also Read: மெத்தனத்தால் தனக்குத்தானே சூனியம் வைத்த லைக்கா.. அயலான், கேப்டன் மில்லரை ஓவர் டேக் பண்ணிய படம்

திருப்பதிக்கு சென்ற சிவகார்த்திகேயனை துரத்திய கேட்ட நேரம்

இதற்காக திருப்பதியில் இருந்து மூன்று கோடி ரூபாய் பணத்தை கஷ்டப்பட்டு ரெடி பண்ணி கொடுத்து விட்டார். அதனால் தான் படமும் ரிலீஸ் ஆகி இப்போது வசூலில் பின்னி பெடல் எடுக்கிறது. அயலான் படத்திற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு படு தோல்வியாக அமைந்தது.

ஆனால் இந்த முறை பிரின்ஸ் செய்யாததை அயலான் செய்துவிட்டது. இந்த படத்தில் ஏலியன் கதாபாத்திரத்துடன், நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் குட்டீஸ்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனால் குடும்ப ஆடியன்ஸ் அயலான் படத்திற்கு தான் சப்போர்ட் செய்கின்றனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் பல போராட்டங்களின் மத்தியில் தான் ரிலீஸ் செய்திருக்கிறார். அவர் நம்பியது போல் இந்த படமும் உலக அளவில் வசூல் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் 100 கோடி வசூலை தட்டி தூக்கிய டாக்டர், டான் பட வரிசையில் அயலான் படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்ட படக்குழு.. கேப்டன் மில்லரை முந்த முடிஞ்சதா?.

- Advertisement -spot_img

Trending News