வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மோசமான வேலை பார்த்த ஷாலினி.. நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்கள் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித்- ஷாலினி இருவரும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் தங்களுடைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னிலையில் சீனியர் ஆர்டிஸ்ட் இடம் ஷாலினி மோசமாக நடந்து கொண்டதை தெரிந்ததும் நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்தை பற்றி, அந்த ஆர்ட்டிஸ்ட்டே சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர் நடிகர் பப்லு.

Also Read: வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்

இவர் இப்போது சின்னத்திரையில் மூத்த நடிகராக டாப் சீரியல்களில் அப்பா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் நடிகர் அஜித்துடன் நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் அஜித்தின் மனைவி ஷாலினியும், பப்லுவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும், ஆனால் அவர்கள் இதுவரை எந்த படத்திலும் இணைந்து பணியாற்றாததால் அவருடன் பேச தயங்கியதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து பப்லுவின் போன் நம்பர் வாங்கி அவரிடம் பேசிய ஷாலினி மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

Also Read: அஜித் மனதில் இடம் பிடித்த 6 ஹீரோயின்கள்.. கிசுகிசுக்கு ஆளான சந்தன நடிகை

ஏனென்றால் பலமுறை பப்லு ஷாலினியிடம் பேச முயற்சித்த போதும், அதை அவர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. இது எப்படியோ அஜித்துக்கு தெரிய வர, யாரிடமும் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வது மேனஸ் இல்லை என்று பீல் பண்ணினாராம். என்னதான் பப்லு உன்னுடன் சேர்ந்து பணிபுரியாவிட்டாலும் அவர் சினிமாவில் உன்னை விட சீனியர். அவரிடம் பேசுவது தான் முறையாக இருக்கும் என்று ஷாலினிக்கு அட்வைஸ் கொடுத்த அஜித், அவரிடம் மன்னிப்பு கேட்கவும் அறிவுறுத்தினாராம்.

இதை அடுத்து பப்லுவிடம் ஷாலினியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பல வருடம் கழித்து பப்லு, இந்த சீக்ரெட்டை லீக் செய்து அஜித் எவ்வளவு நல்ல குணமுடையவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை தற்போது தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

- Advertisement -

Trending News