புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

3 மொழிகளில் குழந்தைகளுக்கு வைத்த பெயர்.. நயன்-விக்கியை பார்த்து வியந்த திரையுலகம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ன செய்தாலும் அது ட்ரெண்டாகுதோ இல்லையோ, பெரிய பஞ்சாயத்தையோ சர்ச்சையையோ கொண்டு வந்து நிறுத்தி விடும். அந்த வகையில் வாடகைத்தாய் முறைப்படி குழந்தையை பெற்றெடுத்த நயன்தாரா பெரும் பரபரப்பு கிளப்பினார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் அவர் தனது இரண்டு குழந்தைகளின் பெயர்களையும் ரிவீல் செய்தார்.

நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. உயிர், உலகம் என அழகிய தமிழ் பெயரை வைக்க நினைத்த நயன்தாரா, அதனுடன் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில எழுத்துக்களையும் சேர்த்து மூன்று மொழிகளில் குழந்தைகளுக்கு பெயர் வைத்து திரையுலகை வியந்து பார்க்க வைத்துள்ளார்.

Also Read: தொடர் தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. மேடையில் அந்த இயக்குனரிடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நயன்தாரா

நயன்தாராவின் இரண்டு குழந்தைகளின் பெயரில் இருக்கும் உயிர், உலக் போன்ற இரண்டு வார்த்தைகளும் தமிழ் சொல். ருத்ரோனில் மற்றும் தெய்வீக என்ற இரண்டு வார்த்தைகளும் சமஸ்கிருத சொல். அதன் தொடர்ச்சியாக வரும் N என்ற ஆங்கில எழுத்து நயன்தாரா பெயரில் இருக்கும் முதல் ஆங்கில எழுத்து. அதன் பின் வரும் சிவன் என்பது விக்னேஷ் சிவனின் பெயரில் இருப்பதை சேர்த்துக்கொண்டனர்.

இவ்வாறு நயன்- விக்கி இருவரும் தங்களது குழந்தைகளின் பெயர்களில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளையும் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் அவர்களது இருவரின் பெயர்களையும் சேர்த்துக் கொண்டனர். இப்படி எல்லாத்திலும் வித்தியாசம் காட்ட நினைத்த நயன்தாரா, தன்னுடைய குழந்தைகளின் பெயர்களையும் இவ்வளவு வித்தியாசமாக வைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுத்த நயன்.. லீக்கான ஜவான் பட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்த அட்லி

அதேசமயம் இவ்வளவு பெரிய பெயர் எதற்கு என்றும் நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்கின்றனர். வளர்ந்து வந்த பிறகு அந்த குழந்தைகள் காரித் துப்பாமல் இருந்தால் சரி தான். மேலும் இந்த குழந்தைகளின் பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்றும் சோசியல் மீடியாவில் அர்த்தம் கேட்கின்றனர். இந்த குழந்தைகளின் பெயரில் இருக்கும் ருத்ரோனில் என்பதற்கு சிவன் வாழும் இல்லம் என பொருள்.

உலக் தெய்வீக் என்பதற்கு உலகளந்த உத்தமனான எம்பெருமான் லோகநாதன் கிருஷ்ணனின் பெயரையும் சூட்டியுள்ளனர் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். உண்மையாகவே இதுதான் நயன்தாரா குழந்தைகளின் பெயர்களுக்கு அர்த்தமா என்றும் ரசிகர்கள் குழம்புகின்றனர். அதே சமயம் இந்த பெயர்களில் இருக்கும் N சிவன் என்பது மட்டுமே நயன்தாரா சிவன் என புரிகிறது. மற்றபடி எதுவும் விளங்கவில்லை பாஸ் என சோசியல் மீடியாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

Also Read: தாலி கட்டிய பின் அடிமேல் அடி வாங்கும் நயன்தாரா.. 40 வயதில் இப்படி ஒரு முடிவா?

ஆனால் இதுவரை அவர்களது தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இருப்பினும் இவ்வளவு பெரிய பெயரை வைத்திருப்பது மட்டுமின்றி மூன்று மொழிகளிலும் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்- விக்கி காதல் ஜோடி, தொடக்கத்தில் இருந்தே ரொம்ப வித்தியாசமான ஜோடி தான் என பலரும் வாயடைத்து வியந்து பார்க்கின்றனர்.

- Advertisement -

Trending News