படுதோல்வி அடைந்த பாபா ரீ ரிலீஸ்.. 3 நாளில் இவ்வளவு தான் வசூலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வது பிறந்த நாள் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் ரீ ரிலீஸ் ஆனது. பாபா படம் வெளியான போது ஒரு சில காரணங்களினால் தோல்வியை தழுவியது.

ஆகையால் இப்போது கிராபிக்ஸ் மற்றும் கிளைமாக்ஸில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இப்படத்திற்காக ரஜினி டப்பிங் எல்லாம் கொடுத்திருந்தார். மேலும் புது பொலிவுடன் வெளியாகும் பாபா படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வசூல் பெறாமல் படம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

Also Read : 2ம் பாகம் வரப்போகுதா.? பாபா ரீ ரிலீஸ் ஒரு விமர்சனம்

இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பால் கிட்டத்தட்ட 57.5 லட்சம் வசூல் செய்திருந்தது. ஆனால் அதன் பின்பு படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனத்தினால் வசூல் குறைய தொடங்கியது. அந்த வகையில் இரண்டாவது நாள் முடிவில் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்த மூன்றாவது நாள் முடிவில் கிட்டத்தட்ட வசூலில் பாதி ஆகவே குறைந்தது. அதாவது 23.75 லட்சம் மட்டுமே வசூலித்தது. தற்போது வரை மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் பாபா ரீ ரிலீஸ் படம் 1.26 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளது. இது ரஜினி மட்டுமின்றி பாபா பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

ஏனென்றால் தற்போது சூப்பர் ஸ்டாரின் படங்கள் கோடிகளை வாரி குவித்து வரும் நிலையில் பாபா ரீ ரிலீஸ் ஒரு கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் ரஜினியை முன்னுதாரணமாக வைத்து பல டாப் நடிகர்கள் தங்களின் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

தற்போது பாபா படம் மண்ணை கவ்வி உள்ளதால் அவர்களும் பின்வாங்கி உள்ளனர். தேவையில்லாமல் இதுபோன்று செய்து தங்களது இமேஜை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற யோசனைகள் உள்ளனராம். மேலும் பாபா கை கொடுக்கவில்லை என்றாலும் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் ரஜினிக்கு மாபெரும் வெற்றி தரும் என அவரது ரசிகர்கள் மனதை ஆற்றிக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 4 கோடி வசூல் செய்துள்ளது. ஆகையால் சமீப காலமாக ரீ ரிலீஸ் ஆன படங்களில் பாபா வெற்றிகரமான படமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இப்பொழுதும் நல்ல வசூலை பெற்ற வருகிறது.

Also Read : மோசமான குணத்தால் ரஜினி, கமலே வெறுத்து ஒதுக்கிய முக்கிய காமெடியன்.. பணம் படைத்தவன் மதியை இழப்பான்

Next Story

- Advertisement -