தூக்கில் தொங்கிய நிகிலா.. பெரும் பிரச்சினையை கையிலெடுத்த பாக்கியலட்சுமி சீரியல்!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்படும். ஏனென்றால் இவ்வளவு நாள் கோபி-ராதிகா இடையே நடக்கும் பிரச்சனையை பெரிதுபடுத்திக் காட்டிக்கொண்டிருந்த இந்த சீரியலில் சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரிய பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.

சமீப காலமாகவே பள்ளி மாணவிகள் ஒரு சில ஆசிரியர்களால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை விழிப்புணர்வாக சொல்லும் விதத்தில் சீரியலில் புது திருப்பம் நிகழ்ந்துள்ளது.

என்னவெனில், இனியாவின் பள்ளித்தோழி நிகிதாவிற்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் உணர்வைத் தூண்டும் விதத்தில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நிகிதா இந்த விஷயத்தை இனியாவிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு இனியா, நிகிதா மற்றும் சக தோழிகள் உட்பட நான்கு பேர் சேர்ந்து தலைமையாசிரியரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். இதை அறிந்த அந்த ஆசிரியர், இவர்களை குறுக்கு விசாரணை போட்டு மிரட்டியுள்ளார்.

பின்பு நிகிதாவை அந்த ஆசிரியர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு, நிகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த விஷயம் இனியாவிற்கு தெரிய, அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி கதறி அழுகிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோவில் இனியா அதிர்ச்சியூட்டும் நிகிதாவின் மரணத்தை பற்றிக் கூறுகிறார். இதன்பிறகு அந்த ஆசிரியரை இனியா வெட்ட வெளிச்சம் போட்டுக் கண்டி, நடந்த உண்மையை அனைவருக்கும் சொல்லி, அந்த ஆசிரியருக்கு தண்டனை வாங்கி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்