உருகி உருகி பேசி ராதிகாவை கட்டியணைத்த கோபி.. பாக்கியாவை கழட்டி விட திட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய கல்லூரி தோழியான ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வந்த கோபி வசமாக மாட்டிக் கொண்டார்.

ஏற்கனவே பழக்கமான பாக்கியலட்சுமி தான் கோபியின் கணவர் என்பதை ராதிகா திருமண நிகழ்ச்சி ஒன்றில் கண்டுபிடித்துவிட்டார். அதன் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் பிறகு கடும் கோபமடைந்த ராதிகா, ‘உங்களுடைய மனைவியுடன் அன்னியோன்னியமாக சந்தோசமாக தானே வாழ்கிறீர்கள்.

ஏன் என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்’ என்று கோபியை உதறி சென்று விட்டார் ராதிகா. அதன் பிறகு உருகி உருகி பேசிய கோபியின் வார்த்தையை நம்பிய விட்டார் ராதிகா.

மேலும் கோபி தன்னுடைய நண்பனிடம், ‘எனக்கு ராதிகா தான் முக்கியம். ராதிகாவிற்காக பாக்கியாவை விட்டுப் பிரியவும் நான் தயார்’ என்று கோபி வில்லத்தனமாக கூறியிருக்கிறார்.

எனவே இவ்வளவு நாளாக ராதிகாவிற்கு எப்போது உண்மை தெரியும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், உண்மை தெரிந்தும் ராதிகா பெரிதாக ரியாக்சன் கொடுக்காததால் பாக்கியாவிற்கு இனி உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இனிமேல் பாக்கியலட்சுமியின் கணவன் கோபி என்பதை அறிந்தும் சுயநலமாக ராதிகா கோபியை தன்வசப்படுத்தி வில்லியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ராதிகாவை கட்டியணைத்த கோபி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்