டிஆர்பி-யில் பிக்பாஸை ஓரங்கட்டிய மூன்று சீரியல்.. கமல் சார் இல்லனா மொத்தமும் குளோஸ்

கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்தது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையும், எப்பொழுதுமே முதலிடத்தில் இருந்து வந்த பாரதிகண்ணம்மா சீரியலையும் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

கடந்த ஒரு வாரமாக கோபி செய்யும் அட்டூழியங்கள் சீரியலின் விறுவிறுப்பை மெருகேற்றி பார்வையாளர்களை தன்பால் ஈர்த்து இந்த வாரம் டி ஆர் பி யில் 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

மேலும் சென்ற வாரம் கண்ணம்மா வெண்பாவை நேக்காக போலீசில் மாட்டி விட்டு வெண்பா கைதாகி சீரியலை பரபரப்பின் உச்சத்தில் எடுத்து சென்றதால் டிஆர்பி ரேட்டிங்கில் 11.6 புள்ளிகளுடன் பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் மீனாவுக்கும் சூனிய கிழவியாக மாறிய தனத்தின் அம்மாவுக்கும் இடையே நிகழும் பல வாக்குவாதங்களால் விறுவிறுப்பாக சென்று பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கில் 11.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இவ்வாறு இந்த மூன்று சீரியல்களும் விஜய் டிவியின் டாப் 3 சீரியல்கள் ஆக மாறி மாறி வலம் வந்து சாதனை படைத்து வருகின்றன. அதோடு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

விஜய் டிவியின் மற்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் பெற்ற புள்ளி விவரங்களில் ராஜா ராணி, தமிழும் சரஸ்வதியும், மௌனராகம், பிக் பாஸ் சீசன்5, நாம் இருவர் நமக்கு இருவர், தென்றல் வந்து என்னை தொடும் போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்