ஒரே கேள்வியில் பதற வைத்த கோபியின் அப்பா.. மிரண்டுபோன பாக்கியலட்சுமி குடும்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இவ்வளவு நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரசியமான சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த சீரியல் கோபி ராதிகாவுடன் பழகும் விஷயம் பாக்யா வீட்டில் இருக்கும் கோபியின் அப்பா ராமமூர்த்தி மற்றும் எழில் ஆகிய இருவருக்கும் தெரியவந்த நிலையில் தற்போது பாக்யாவிற்கும் கோபியின் நடவடிக்கையால் சந்தேகம் ஏற்பட துவங்கியுள்ளது.

அதற்கேற்றார்போல் கோபி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஹாலில் மாட்ட வேண்டாம் என்று அதை மறைத்து வைக்கும்போது பாக்யா அதை பார்த்து விடுகிறார். இந்த விஷயத்தை பாக்யா தன்னுடைய மாமனாரிடம் சொல்ல, அவர் பாக்யாவிடம் ஏதோ ஒன்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இருப்பினும் பாக்யாவிற்கு கோபியின் மீது ஏற்பட்ட சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அத்துடன் தற்போது பாக்யாவின் வீட்டிற்கு வந்திருக்கும் ராதிகாவின் மகள் மயூ, கோபியின் அப்பாவிடம், தன்னுடைய அம்மாவிற்கும் கோபி அங்கிளுக்கும் இரண்டாவது திருமணம் நடைபெறப் போவதாக உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கோபியின் அப்பா, மயூவிடம் கோபி மற்றும் பாக்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, ‘இந்த அங்கிள் யாருன்னு தெரியுதா?’ என்று கேட்க மயூரி உட்பட பாக்யா உள்ளிட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர்.

எனவே பாக்யாவின் கணவர்தான் கோபி என்பதை மயூ மூலம் ராதிகா தெரிந்து கொள்ளப் போகிறார். அதன் பிறகு பாக்யா மீது இருக்கும் மரியாதை நிமித்தமாய் கோபியை சரமாரியாக வெளுத்து வாங்கப் போகிறார்.

ஆனால் ப்ளேபாய் கோபி அதையெல்லாம் அசால்டாக துடைத்தெறிந்து, மீண்டும் தன்னுடைய நடிப்பை அரங்கேற்றி ராதிகாவை தன் பக்கம் ஈர்த்து பாக்யாவிற்கு எதிராக திருப்பி விடப் போகிறார். இதன்பின்பு ராதிகா மற்றும் பாக்யா இருவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு பின் ராதிகா, கோபி தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பின்பு பாக்யா தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் தான் முக்கியம் என்று, அவர்களுக்காக கோபியை விட்டுக்கொடுக்க உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து திருப்பங்கள் பாக்கியலட்சுமி சீரியலில் அரங்கேற உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்