ராதிகாவை பிரிக்க பாக்யா போட்ட மாஸ்டர் பிளான்.. சந்தி சிரிக்க போகும் கோபியின் வாழ்க்கை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு அதே தெருவில் இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வசிக்கும் கோபி, இந்த வாழ்க்கையிலும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். ஏனென்றால் கோபியின் மகள் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் சுத்தமாகவே ஒத்துப் போகவில்லை.

இதனால் நாளுக்கு நாள் கலகம் தான் பிறக்கிறது. அதிலும் இப்போது கொஞ்சம் எல்லை மீறி ராதிகாவை மரியாதை இல்லாமல் இனியா பேசுகிறார். அந்த சமயத்தில் இனியாவிற்கு சாதகமாக தான் கோபி பேசுவதால், ராதிகா பொங்கி எழுகிறார்.

Also Read: முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

மறுபுறம் இனியா எப்போது வீட்டிற்கு வருவார் என பாக்யா வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் பாக்யாவால் வீட்டை விட்டு வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்க சென்றாலும் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், இனியா வீட்டை விட்டு வெளியேறியதை குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: முதல் முறையாக சன் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கி விஜய் டிவி.. அனல் பறக்கும் டாப் 10 சீரியல்கள்

ஆனால் பாக்யா இதற்கெல்லாம் அசராமல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் எழில் பாக்யாவிடம் அமிர்தா ஊரை விட்டு சென்றதை சொல்கிறார். ஆனால் அமிர்தாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாக்யாவும் எழிலும் அதைப் பற்றி யோசிக்கின்றனர்.

இவ்வாறு குடும்பத்திலும் அடுத்தடுத்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் என பாக்யா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அத்துடன் பாக்யா தற்போது இனியாவை ராதிகா வீட்டிற்கு அனுப்பி கோபியை சந்தி சிரிக்க வைப்பது சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

Also Read: குசும்புக்கார கிழவனா இருக்காரே.. சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்

- Advertisement -