செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பைனலுக்கு தகுதி இல்லாத அசீம்.. ஆரி ஸ்டைலில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியாதல் தற்போது ட்ரெண்டிங்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இந்நிலையில் அசீமுக்கு ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் இணையத்தில் ஒரு பிரளயமே கிளம்பி உள்ளது. அதாவது ஆரம்பத்திலிருந்து பலமுறை கமல் அசீமை எச்சரித்துள்ளார்.

முதல் இரண்டு வாரங்களில் கமலின் பேச்சை கேட்டு சற்று நிதானமாக விளையாடிய அசீம் அதன் பிறகு பழையபடி மற்ற போட்டியாளர்களிடம் கத்துவது, சண்டையிடுவது என்று செய்து கொண்டிருக்கிறார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அசீமுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் அசீமுக்கு ஆதரவு அதிகம் தான்.

Also Read : பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

இப்படி இருக்கையில் கடந்த வாரம் கமல் எபிசோடில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்க இங்கு யாருக்கு அருகதை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். இதற்கு அனைவருமே ஒருமித்தமாக அசீமை கை கட்டினார்கள். அவ்வாறு வீட்டில் உள்ள அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார்.

இதேபோல் தான் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரியை மற்ற போட்டியாளர்கள் புறக்கணித்து வந்தனர். அதுமட்டுமின்றி அதே 91 வது நாளில் எல்லோருமே ஆரி டைட்டில் வின்னர் பட்டத்தை வாங்க தகுதி இல்லை என்று கூறினார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஆரி வெளியில் வந்து சத்தமாக கத்தினார். ஆனால் கடைசியில் அவர்தான் டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்தார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர்.. திட்டம் போட்டு காயை நகர்த்திய விஜய் டிவி

அதே நிலைமை தற்போது அசீமுக்கும் வந்துள்ளதால் வெளியே வந்து நானி போல வானத்தைப் பார்த்து மனதை தேற்றிக்கொண்டு உள்ளார். மேலும் ஒரே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அசீம் வானத்தைப் பார்க்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதுமட்டுமின்றி கமல் தொடர்ந்து அசீமை டார்கெட் செய்து வருவதாக அவருக்கு எதிராக சிலர் இணையத்தில் போர்க்கொடி தூக்கி உள்ளார்கள். ஆனால் கமலை பொருத்தவரை தப்பு செய்தால் தட்டி கேட்பதை இந்த சீசனில் மட்டுமின்றி எல்லா சீசனிலும் கடைப்பிடித்து வருகிறார். ஆகையால் கமலுக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : இந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி தர போகும் பிரபலம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

- Advertisement -

Trending News