டிஆர்பிஐ தெறிக்க விட ஆயுத பூஜைக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. மாவீரனுக்கு போட்டியாக வரும் சந்தானம்

Ayutha Pooja Movies: விடுமுறை தினங்களில் எந்த அளவிற்கு திரையரங்குகளில் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறதோ, அதே மாதிரி வீட்டில் இருந்தே பார்க்கும் அளவிற்கு டிவி சேனல்களும் அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ள புத்தம் புது படங்களை ஒளிபரப்பு செய்வார்கள். அப்படி வருகிற ஆயுத பூஜைக்கு போட்டி போட்டு டிவியில் வரும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

விடுதலை: இந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை கொடுத்தது. இன்னும் சொல்ல போனால் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இப்படம் ஆயுத பூஜை அன்று மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

டிடி ரிட்டன்ஸ்: ஜூலை மாதம் காமெடி கலந்த திரில்லர் படமாக சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தான் சந்தானம் ஹீரோவாக நடித்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் ரசித்து பார்த்தார்கள். முக்கியமாக சில தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகி போனது. அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக சந்தானத்திற்கு வெற்றியை கொடுத்தது. அப்படிப்பட்ட படம் ஆயுத பூஜை அன்று ஜீ தமிழில் மதியம் 1 மணிக்கு வர இருக்கிறது.

மாவீரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படமாக வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட இப்படம் ஆயுதபூஜை அன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. எப்படியும் முக்கால்வாசி மக்கள் சன் டிவியை தான் விரும்பி பார்ப்பார்கள். அதனாலயே சிவகார்த்திகேயன் படத்தை போட்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க ஏற்பாடு பண்ணி இருக்கிறார்கள்.

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ஆயுத பூஜை அன்று விஜய் டிவியில் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பு ஆகப்போகிறது. அடுத்து விஜயதசமி அன்று மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இப்படி தொடர்ந்து புத்தம் புது படங்களை வெளியிட்டு ஒவ்வொரு சேனல்களும் அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் இரண்டு புத்தம் புது படங்களை இறக்கி மக்களின் பேராதரவை பெற போகிறார்கள்.