தயாரிப்பாளருக்கு செலவை இழுத்து விட்ட கமல்.. இரண்டு காதல் மன்னர்கள் இணைந்த அந்தப் படம்

சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படி நம்மை பிரமிக்க வைத்த ஒரு நகைச்சுவை திரைப்படம் அவ்வை சண்முகி. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான பெண் போன்று வேடமிட்டு நடித்து அசத்தியிருப்பார்.

பார்ப்பதற்கு எந்த வித்யாசமும் தெரியாமல் அச்சு அசல் ஒரு ஐயர் வீட்டு மாமி போல இருக்கும் அந்த கேரக்டர் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. மிஸஸ் டவுட் ஃபயர் என்ற ஹாலிவுட் பட சாயலில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், மீனா ஆகியோர் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தனர்.

கிரேசி மோகன் வசனத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை காட்சிகளும் நகைச்சுவை நிரம்பி வழியும். அதிலும் அவ்வை சண்முகியாக கமல் செய்யும் கலாட்டாக்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இதனால் அந்த காலகட்டத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக ஓரளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த அவ்வை சண்முகி திரைப்படம் நல்ல ரேட்டுக்கு பிசினஸ் செய்யப்பட்டது. லோ பட்ஜெட் படம் நல்ல பிசினஸ் ஆனதை கவனித்த கமல்ஹாசன் தயாரிப்பாளருக்கு மேலும் ஒரு செலவை இழுத்து விட்டார்.

அது என்னவென்றால் தென்னாப்பிரிக்காவில் ஒரு பாட்டு வைக்க வேண்டும் என்று அவர் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி மொத்த குழுவும் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று ஒரு பாடலை படமாக்கி வந்தது. அதன்பிறகு படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

உண்மையில் படத்தை ரசிகர்கள் எவ்வளவு ரசித்தார்களோ, அதே அளவுக்கு தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்பட்ட அந்த பாடலையும் ரசித்தார்கள். ஹரிஹரன், சுஜாதா இணைந்து பாடிய காதலா காதலா என்ற பாடல்தான் அது. இன்றும் கூட அந்தப் பாடல் பலரின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -