இந்தியன் 2 மேடையில் கமலுக்கு ஐஸ் வைத்த அட்லி.. பழனிக்கு பால் காவடி எடுத்தாலும் வாய்ப்பில்ல ராசா

Atlee – Kamal: நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் சில விஷயம் நடக்காது என்று உறுதியாக சொல்லுவாங்க. அது அட்லி விஷயத்தில் சரியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஜவான் படம் மூலம் பெரிய அளவில் ரீச் ஆன இயக்குனர் அட்லியையும் அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தார்கள்.

குட்டி தம்பியை அசிங்கப்படுத்திய உலகநாயகன்

ஒருவகையில் அவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் ஆக இருந்தவர் என்ற உரிமையும் கொஞ்சம் உண்டு. ஆனால் அதை அவர் மேடையில் கொஞ்சம் அதிகமாகத்தான் உபயோகித்து விட்டார். மேடை ஏறியதும் இந்தியன் 2 படத்தின் கதை எனக்கு பத்து வருடத்திற்கு முன்பே தெரியும் என சொன்னார்.

இயக்குனர் சங்கர் இந்த கதையை நான் உதவி இயக்குனராக இருந்தபோதே எங்களிடம் டிஸ்கஸ் செய்தார் என்றும் பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பைபிள். எதிர்காலத்தில் என் மகன் சினிமானா என்ன என்று கேட்டால் நான் கமலஹாசனை தான் காட்டுவேன் என ஒட்டுமொத்த ஐசையும் தூக்கி உலகநாயகன் தலைமீது வைத்தார்.

அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் உடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்றும் சொல்லி இருந்தார். அடுத்ததாக மேடை ஏறிய கமல் அட்லியின் ஆசையைப் பற்றி எதுவுமே பேசவில்லை.

நீ என்ன ஐஸ் வச்சாலும் வேலைக்கு ஆகாது என்று மறைமுகமாக சொல்லிவிட்டார். அட்லி காப்பி அடித்து தான் கதை எடுப்பார் என்பது அவர் மீது இருக்கும் பெரிய குற்றச்சாட்டு. இதை கமலஹாசன் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் கண்டிப்பாக அட்லிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு அட்லி இயக்கிய மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை தான் என மேடையிலேயே அவரை பங்கமாய் கலாய்த்து இருக்கிறார்.

Next Story

- Advertisement -