அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

Ajith, Atlee: இயக்குனர் அட்லீக்கு மிக குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் நான்கு வருடங்களுக்கு மேலாக ஜவான் படத்தை எடுத்து வந்தார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அதன்படி ஜவான் படம் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில் ஒரு வழியாக செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்போது இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது அட்லீயை பாலிவுட் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.

Also Read : லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

அதுமட்டுமின்றி பாலிவுட்டிலேயே இவரை லாக் செய்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களின் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கிறதாம். இவ்வாறு ஒரு ஹிட் மட்டுமே கொடுத்தாலும் அட்லீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால் அஜித்தின் நண்பரை மட்டும் இவ்வாறு கொண்டாடப்படவில்லை.

அதாவது அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் பில்லா. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதன் பிறகு மீண்டும் அஜித் உடன் இணைந்து ஆரம்பம் என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மற்றொரு படத்தில் இந்த கூட்டணி கண்டிப்பாக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

அதேபோல் ஆர்யாவுக்கு பட்டியல், சர்வம் போன்ற படங்களை விஷ்ணுவர்தன் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹிந்தியில் “shershaah” என்னும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் விஷ்ணுவர்தன் பாலிவுட் சினிமாவால் கொண்டாடப்படவில்லை. ஏனென்றால் அதன் பிறகு அவர் மிகப்பெரிய இடைவெளி எடுத்துவிட்டார். இதனாலேயே அட்லீக்கு கிடைத்த மாலை, மரியாதை விஷ்ணுவர்தனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

Also Read : அஜித்துக்கு ஆக்சன் சொல்லப்போகும் மகிழ் திருமேனி.. விடாமுயற்சி சூட்டிங் எப்போது தெரியுமா?

Next Story

- Advertisement -