உயிர் பயத்தில் அட்லீ பட கிங் காங்.. Y+ பாதுகாப்பில் ஷாருக்கான், காரணம் கேட்டு அதிர்ந்த திரையுலகம்

Atlee-Shah Rukh Khan: பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் இப்போது சினிமாவில் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். பாலிவுட் சினிமாவில் வெளியாகும் படங்களை சமீபகாலமாக பாய்காட் செய்து வருவதால் பெரிய நடிகர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஷாருக்கான் தொடர்ந்து இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியான ஷாருக்கானின் பதான் படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்தது. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் ஜவான் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான 18 நாட்களில் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து விட்டது.

Also Read : ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றி திரியும் அட்லீ.. அது சரி ஆசைப்படுவதெல்லாம் தப்பில்லையே?

அடுத்ததாக ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்காக ஷாருக்கானின் டங்கி படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவ்வாறு ஷாருக்கான் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உளவுத்துறையில் இருந்தும் ஷாருக்கானுக்கு ஆபத்து உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் எப்போதுமே ஷாருக்கானுக்கு இரண்டு பாதுகாப்பு ஊழியர்கள் இருந்த நிலையில் இப்போது கொலை மிரட்டல் காரணமாக Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய 6 பாதுகாப்பு பணியாளர்கள் ஷாருக்கானை சுற்றி இருப்பார்கள். மேலும் இந்த நடவடிக்கையை மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது.

Also Read : மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்

இதற்கு முன்னதாக ஷாருக்கான் மகாராஷ்டிரா அரசுக்கு மீண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடிதம் எழுதி இருந்தார். ஆகையால் உடனடியாக அரசு Y+ பாதுகாப்பு ஷாருக்கானுக்கு கொடுத்திருக்கிறது. இந்த செய்தி இப்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருபுறம் பெரிய ஹீரோக்கள் தங்களது படம் வசூல் செய்யவில்லையே என்ற வருத்தத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அட்லீயால் பல கோடி லாபம் பார்த்த ஷாருக்கான் இப்போது உயிர் பயத்தில் பாதுகாப்பை நாடி இருக்கிறார். மேலும் ஷாருக்கான் ரசிகர்கள் இப்போது டங்கி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் இந்த செய்தி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : விஜய்க்கு அடுத்த பட கதை சொன்ன அட்லீ.. ஆகா, இது அந்த படமல என உஷாரான தளபதி