அஸ்வினின் என்ன சொல்லப் போகிறாய்.. இணையத்தில் பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் கதாநாயகனாக ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஹரிஹரன் எழுதி இயக்க ஆர் ரவிச்சந்திரனின் டிரைட்ண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

எனவே பொங்கல் ரிலீசாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை குறித்த நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் அடிக்கின்றனர். ஏனென்றால் அஸ்வின் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது, ‘இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன். அதில் நான் தூங்காமல் கேட்ட முதல் கதை ஹரிஹரன் உடைய கதை; என்று பேசியதால் பெரிதும் சர்ச்சைக்குளாக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் பலமுறை ‘சொன்னது தவறு’ என்று ஒத்துக்கொண்டாலும், ‘வளரும்போதே இவ்வளவு திமிரா!’ என்று பலருடைய திட்டுக்கு ஆளாக்கினார். இருப்பினும் அஸ்வின் நடித்த என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தை பார்த்த பின் ரசிகர்கள், ’40 கதையை கேட்டு தூங்கிய நீங்கள், இந்த கதை கேட்டும் தூங்கி இருக்க வேண்டும்’ என்று சோஷியல் மீடியாவில் கிண்டல் அடிக்கின்றனர்.

ஏனென்றால் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் ரொமான்டிக் காதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அத்துடன் படத்தின் இரண்டாம் பாதி செம சொதப்பலாக இருந்ததுடன், சொல்லும்படி அளவுக்கு ஒரு சீன் கூட இடம்பெறவில்லை.

ஆகையால் முதல் பாதியை ஒப்பிடும் போது இரண்டாம் பாதி ரொம்பவே போராக அமைந்துவிட்டது. இந்தப் படத்தில் அஸ்வினுடன் தேஜூ அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, டெல்லி கணேஷ், புகழ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் அஸ்வின் முதல் முதலாக கதாநாயகனாக நடித்திருக்கும் என்ன சொல்லப் போகிறாய் என்ற படம் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல், ஒரு தடவை பார்க்கலாம் என்ற உணர்வைத் தருகிறது.

எனவே படத்தில் அஸ்வின், தன்னால் முடிந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதை கவர முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசியது இன்றும் நெட்டிசன்கள் மறக்காமல் மீம்ஸ் போட்டு பங்கம் செய்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை