ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வித்தியாசமான கதைக்களத்தில் அறிமுகமாகும் குக் வித் கோமாளி அஷ்வின்.. சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்து விடுவாரோ.?

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தெலுங்கு நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானே தற்போது டக் ஜெகதீஷ், ஷ்யாம் சின்கா ராய், அண்டே சுந்தரானிகி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் டக் ஜெகதீஷ் படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் நானி தனது முத்திரையை பதித்துள்ளார். இவரது தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களும் வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட படங்களாகும். இந்நிலையில் தற்போது மீட் க்யூட் என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார்.

5 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி படத்தை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு ஆந்தாலஜியில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் நாயகனாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து குக் வித் கோமாளி அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “தெலுங்கில் மீட் க்யூட் ஆந்தாலஜி படம் மூலமாக அறிமுகமாகிறேன். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஷ்வினுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ashwin kumar
ashwin kumar

இப்படத்தில் அஷ்வின் மட்டுமன்றி சத்யராஜ், ரோகிணி, ஆதா ஷர்மா, வர்ஷா பொல்லாமா, அகன்ஷா சிங், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த அஷ்வின் தற்போது தமிழில் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஆந்தாலஜி மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதால் அஷ்வினின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயனுக்கு போல அஸ்வின் ஒரு காலத்தில் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News