வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுக்கும் அசோக் செல்வனின் 5 படங்கள்.. போர்த் தொழிலுக்கு முன் வெளிவந்த திகில் படம்

Actor Ashok Selvan : அசோக் செல்வன் ஆரம்பத்தில் சுமாரான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் போகப்போக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான கதையுடன், திரில்லராக கதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்களைப் பற்றி பார்க்கலாம்.

தெகிடி: இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு தெகிடி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயப்பிரகாஷ், ஜனனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கிரிமினாலஜி படிப்பை முடித்து டிடெக்டிவ் ஆபீஸராக பதவியை ஏற்று தனிப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்து கொடுப்பது தான் இவருடைய முதல் வேலை. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்துக் கொடுக்கும் ஒவ்வொரு நபரும் மறைமுகமாக கொல்லப்படுகிறார்கள். அது எப்படி, யார் பண்ணுகிறார் என்பதை விறுவிறுப்பாக திகில் படமாக கதை கொண்டுவரப்பட்டிருக்கும்.

Also read: சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

போர்த்தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த மாதத்தில் வெளிவந்த போர்த் தொழில் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இதில் அசோக் செல்வன் படித்து முடித்துவிட்டு எந்தவித அனுபவம் இல்லாமல் சரத்குமாருக்கு உதவியாளராக பணிபுரிந்து மர்மமாக கொலை செய்யக்கூடிய நபர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பில் கதை சஸ்பென்ஸ் ஆக நகரும்.

கூட்டத்தில் ஒருத்தன்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது தன்னை எப்படியாவது முன்னேற்றி காட்டி நாம் நினைத்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உதாரணமாக சொல்லும் படம். இப்படத்தில் அசோக் செல்வன் ஜனனியோட சேர வேண்டும் என்பதற்காக வாழ்வில் முன்னேற நினைப்பார். அதன்பின் இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது தான் மீதமுள்ள கதை.

Also read: 2022-ல் அசோக் செல்வன் கொடுத்த 5 தோல்வி படங்கள்.. மொத்தமாக ஊத்தி முடிய வெங்கட் பிரபுவின் மன்மத லீலை

சவாலே சமாளி: சத்திய சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் சவாலே சமாளி என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அசோக் செல்வன் டிவி சேனலில் வேலை பார்ப்பதால் அவருடைய சேனலின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான வழியைத் தேடுவது தான் முக்கிய கதையாகும். ஆனால் இப்படம் நினைத்தபடி இவருக்கு வெற்றியை கொடுக்காமல் தோல்விப் படமாக அமைந்தது.

வேழம்: சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வருடம் வேழம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் மர்மமாக தொடர் கொலை நடக்கும் ஒரு ஊருக்கு அசோக் செல்வன் அவருடைய காதலியை கூட்டிப் போயிருப்பார். அங்கே எதிர்பாராத சூழ்நிலையில் காதலியின் உயிர் மர்மமாகப் போவதால், அதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதையாகும்.

Also read: ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் 5 ஹீரோக்கள்.. அடல்ட் கண்டன்ட் நடிச்சும் வேலைக்கு ஆகாத அசோக் செல்வன்

- Advertisement -

Trending News