சார்பட்டா வெற்றியால் ஆர்யாவின் திடீர் முடிவு.. அதிர்ச்சியில் இயக்குனர்கள்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தன்னுடைய வழக்கமான நடவடிக்கைகளை மாற்ற முடிவு செய்துள்ளாராம் ஆர்யா. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

ஆர்யா கடந்த சில வருடங்களாகவே சுமாரான படங்களை கொடுத்து வந்தார். ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் வெளியான ஆர்யா படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக டெடி, சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் அரண்மனை 3 படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆர்யாவுக்கு ஆரம்பத்தில் ஒரு நல்ல பாலிசி உண்டு. பெரியதாக அனுபவமில்லாத இயக்குனர்களாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் அதில் நடிக்க தயார் என கூறியதால் அவரை பல இளம் இயக்குனர்கள் தேடிச்சென்று கதை சொல்லி வந்தனர்.

ஆனால் அது கைகொடுத்ததா என்றால் சந்தேகம்தான். அதற்கு மாறாக ஏற்கனவே தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வருபவர்களுடன் அவர் செய்த படங்கள் வெற்றியை பெற்று அவருடைய மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதால் இனி வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குனர்களுடன் மட்டுமே பணியாற்ற போகிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறார் ஆர்யா.

இதனால் பல வருடங்களுக்கு முன்பு ஆர்யாவுக்கு கதைசொல்லி காத்திருந்த இளம் இயக்குனர்கள் பலருக்கும் இனி வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

aarya-cinemapettai
aarya-cinemapettai

Next Story

- Advertisement -